உலகம் ஓர் ப்ளூபெர்ரி!



Image result for blueberry




இப்படியெல்லாம் யோசிக்கலாமா என்று கேட்கக்கூடாது.யோசித்தால் எப்படியிருக்கும் என்பதுதான் விஷயமே.

உலகம் திடீரென ப்ளூபெர்ரி பழங்களாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்?

உலகில் உள்ள எரிமலைகளில் லாவாவுக்கு பதில் ப்ளூபெர்ரி சாறும், ஜாமும் பெருக்கெடுத்து ஓடும். நிலமும், கடலும் இருப்பதற்கு பதில் பழங்களாக இருப்பதால், பூமியின் சைசும் மாறுபடும். பூமியின் சுழற்சி பத்தொன்பது மணிநேரங்களுக்கு ஒருமுறை என மாறிவிடும்.

பெர்ரி இருப்பதால் பாறைகளின் அடர்த்தி, எடை, ஈர்ப்புவிசை இருக்காது. எனவே, பூமியின் ஈர்ப்புவிசை குறைந்துவிடுவதால் நிலவு பூமியின் துணைக்கோளாக இனியும் இருக்காது. செயற்கைக்கோள்கள் அப்படியே பூமிக்கு உள்ளிழுக்கப்பட்டு எரிந்துபோகும் வாய்ப்பு உண்டு.


இது ஆன்டர்ஸ் சான்ட்பெக் என்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ க ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியின் விளைவாக கூறப்பட்டது.

நன்றி: பிபிசி


பிரபலமான இடுகைகள்