இணையத்தின் இருள் உலகம்- என்ன நடக்கிறது?






Image result for dark web


இருள் உலகம்



இணையத்தில் சாதாரணமாக கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவற்றில் நாம் தேடுவது நான்கு சதவீத தகவல்கள்தான். இதைத்தாண்டி உள்ளது அரசு அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் சார்ந்த ஆவணங்கள். இவற்றை இணையத்தில் கூகுளிட்டு நீங்கள் பெறமுடியாது. இப்படி நாம் எளிதில் அணுக முடியாத ஆவணங்களின் அளவு 90 சதவீதம்.

இதைத்தாண்டி உள்ளதுதான் இணையத்தின் இருள் உலகு. இதில் நீந்த உங்களுக்கு ஸ்பெஷல் மென்பொருட்கள் தேவை. இங்கு போதைப்பொருட்கள், ஆபாச தளங்கள் என வெளியுலகின் சட்டதிடங்களுக்கு அப்பாற்பட்ட உலகு இயங்குகிறது. அனைத்தும் சூப்பராக பாதுகாப்புடன் என்கிரிப்ஷன் செய்யப்பட்டு இயங்குகிற இந்த உலகில் உள்ளே செல்வது அவ்வளவு எளிதல்ல. இங்குள்ள தகவல்களின் அளவு 6 சதவீதம்.


டார் ப்ரௌசரை வைத்து நார்மலாக கூகுள் உள்ளிட்ட தளங்களை அடைவது சிரமம். இதன்மூலம் பல்வேறு பிட்காயின் கைமாற்றங்களை, செய்தி பரிமாற்றங்களைச் செய்யலாம். இதில் குக்கீஸ்களை அனுமதிக்கும் முறை கிடையாது என்பதால், எந்த இணையதளம் சென்றாலும் உடனே அத்தளம் நமக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

டார் உலாவியிடமிருந்து எந்த தகவலும் இணையதளத்தில் பதிவாகாது. மூன்று அடுக்குகளாக உள்ள பாதுகாப்பு வளையத்தில் குறிப்பிட்ட ஆட்கள் மட்டுமே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இதனையும் கண்டுபிடிக்கலாம். ஆனால் எந்த நேரத்தில் எந்த செய்தியை பரிமாறிக்கொள்கிறார்கள் என்பதில் கவனம் இருந்தால், மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.


பிட்காயின் பரிமாற்றம் இதில் நிகழ்கிறது என்பது நீங்கள் அறிந்த செய்தி. இதில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்த கத்தார் ஆய்வாளர்கள் அவர்களின் டார் வெப் முகவரியை ட்விட்டரில் பகிர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியூட்டியது. மொத்தம் 125 பேர் இம்முறையில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டது அப்போதுதான் உலகிற்கு தெரிய வந்தது.


எக்சிட் நோட்(exit node)

டார் ப்ரௌசரின் கடைசி லிங்க் இது. இந்த முறையில் செயல்படுபவர்கள் போலீசில் மாட்டும் சாத்தியம் அதிகம். எனவே கவனம் ப்ளீஸ்.

ஸ்னிப்பர்

இணைய உலகில் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினிகளில் ஏற்படும் பாதுகாப்பு பிரச்னைகளை அறிவிக்க பாதுகாப்பு ஏஜென்சிகள் இதனைப் பயன்படுத்துகின்றன.

ஃபுல்ஸ்

வேறொன்றுமில்லை. இணையத்தில் உலவும் பயனர்களின் தகவல்களின் தொகுப்பு. முழுத்தகவல் தொகுப்பை இந்த சொல்லில் குறிக்கிறார்கள். பத்து முதல் நாற்பது டாலர்கள் வரை இதற்கு செலவிட்டால் தகவல்கள் கிடைத்துவிடும்.

தம்ளர்ஸ்

டிஜிட்டல் உலகில் பணத்தை திருட்டும் கூட்டத்தைக் குறிக்கும் சொல் இது. திண்டுக்கல்லில் பூட்டு  தயாரிக்கும்போது , அதைத் திறக்கும் சாகசக்காரன் பிறந்துவிடுவான் என்று சொல்வார்களே அதே சாமர்த்தியசாலிகளைச் சொல்லதான் இந்த சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

செக்யூர் ட்ராப்

இது டார் மென்பொருளின் ஆவணப்பாதுகாப்பு வசதி. இதைப் பயன்படுத்தித்தான் பத்திரிகையாளர்கள் ஆபத்தான பல செய்திகளைப் பெறுகிறார்கள்.


ஹனிபாட்

இது அமெரிக்க அரசு, போதைப்பொருட்களை விற்கும் ஆட்களைக் கண்காணிக்க மால்வேரைப் பயன்படுத்தும் செயலைக் குறிக்க பயன்படும் சொல்.

நன்றி: பாப்புலர் சயின்ஸ்












பிரபலமான இடுகைகள்