கருக்கலைப்புதான் சீரியல் கொலைக்கு காரணம் - சூ வென்
அசுரகுலம்
சூ வென்
இவரை சீனாவில் டாக்சி சாத்தான் என்கிறார்கள். துப்பினால் துடைச்சுக்குவேன் என பாட்டே பாடியாச்சு. இனி இவரை அசுரன் என்றால் என்ன ஆவக்காய் என்றால் என்ன? சீன மொழியில் கியா குவா என்று கூறிக்கொண்டு பிறரும் சென்றுவிடுவார்கள்.
2003 ஆம் ஆண்டு ஜூலை தொடங்கி நவம்பர் வரை இவர் ஆறு பெண்களைக் கொன்றார். இரவில் மட்டும் விழிக்கும் சாத்தான் வென். இரவில் தன் காரில் ஏறும் பெண்களை இருள் சூழ்ந்த பக்கமாக கொண்டு சென்று, ம்ஹூம் நீங்கள் நினைக்கும் காட்சி கிடையாது. கயிறு வைத்து கழுத்தை இறுக்கி கொன்று உடலை கிணற்றில் அல்லது நகருக்கு வெளியே போட்டுவிட்டு அடுத்த சவாரி பார்ப்பது வென்னின் சாமர்த்தியம்.
இவருடன் காரில் மீட்டர் போட்டு வந்த பெண் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்பினார். ஆனால் அதனை உடம்பின் பசிக்காக செய்திருந்தால் கூட வென் மன்னிக்க வாய்ப்பிருக்கிறது. ஒண்ணுமே செய்யாத தன் கணவரைப் பழிவாங்க செய்ய நினைத்தார். அந்த பாடாவதி லட்சியத்தையும் வென்னிடம் காதல் மயக்கத்தில் சொல்லித்தொலைய ருத்ரனான வென் அடுத்த நொடி அப்பெண்ணின் கழுத்தை முறித்துக் கொன்றார்.
வென், கார்ப்பரேட் கம்பெனி ஓனர் போல. அனைத்தையும் சார்ட் போட்டதுபோல டயரியில் எழுதி வைத்திருந்தார். எந்த நாள், எமகண்டமா, ராகு காலமாக, முகூர்த்த நேரத்தில்தான் உடலை எறிந்தோமா ரகத்தில் நீண்டது அந்த டயரிக்குறிப்பு.
அப்புறம் என்ன போலீஸ் சும்மா ஒருவர் கிடைத்தாலே அந்தச் சரகத்தைச் சேர்ந்த அத்தனை வழக்குகளையும் தலையில் கட்டிவிடும். வென் கூகுள் மேப் லெவலுக்கு அனைத்தையும் பரிசுத்த உள்ளம் கொண்டு எழுதியிருந்தால்.... வென் பிடிபட்ட அன்று அன்ஷான் எனும் நகரே திருவிழாக்கோலம் கொண்டது. அவர்களுக்கு அது பாதுகாப்பு. கூடவே டாக்சிவாலாக்களும் சேர்ந்து கொண்டனர். அது எதற்கு? தொழிலும் பாதித்து பலரும் டாக்சியில் செல்வதையே தவிர்த்து விட்டனர். அதற்காகவும்தான்.
என்ன காரணம்?
வென்னின் முன்னாள் மனைவி இவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்காமல் என் கரு என் உரிமை என உருவான கருவை கலைத்துவிட்டார். அந்த கோபம்தான் பின்னாளில் பெண்கள் மீதான வங்கொலையாக மாறித் தொலைந்தது. கொலை செய்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நான் கொன்றவர்கள் அனைவருமே விபச்சாரிகள்தான். நான் எதற்கு பயப்படவேண்டும்? என்று பேட்டியளித்துவிட்டு வழக்கைச் சந்தித்தார். இவர் சிறையில் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்று தெரியவில்லை.
ஆக்கம்: பொன்னையன் சேகர்
நன்றி: லிஸ்டர்வர்ஸ், மர்டர் பீடியா, பின்டிரெஸ்ட்