இடுகைகள்

இந்தியா - பேரிடர் இழப்பு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரிடர் இழப்பால் இந்தியாவுக்கு இழப்பு எவ்வளவு?

படம்
பேரிடர் இழப்பு! இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த இயற்கை பேரிடர்களால் 79.5 பில்லியன் டாலர்கள் இழப்பு நேரிட்டுள்ளதாக ஐ.நா சபையின் பேரிடர் மேலாண்மை அறிக்கை(1998-2017) தெரிவிக்கிறது. பேரிடர் பிரச்னைகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு 151% அதிகரித்துள்ளது(78-98 காலகட்ட ஒப்பீடு). உலகளவில் இயற்கை சூழல்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 2.908 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. அமெரிக்கா(944.8 பில்லியன்), சீனா(492.2 பில்லியன்), ஜப்பான்(376.3 பில்லியன்) என பேரிடர்களின் இழப்பு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. புயல்(28.2%), வெள்ளம்(43.4%), நிலநடுக்கம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார இழப்புகளுக்கு முக்கிய காரணிகள். பொருளாதார இழப்புக்கு 71% இயற்கை பேரிடர்களே முக்கிய காரணங்களாக 7 ஆயிரத்து 255 சம்பவங்களை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது. இப்பேரிடர்களால் 4.4 பில்லியன் மக்கள் காயமுற்றும், 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். மக்கள் உயிரிழப்பு 56 சதவிகிதமாக அதிகரிக்க நிலநடுக்கமும், சுனாமியும் காரணமாக உள்ளதை ஐ.நாவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.