இடுகைகள்

ஆய்வறிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு

படம்
  பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு. அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது. 1970ஆம் ஆண்டு அமெரிக்காவில்   ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது.   மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமா

சீனாவில் சுண்ணாம்புக்கல் பாறைகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்! - மார்ஜோரி ஸ்வீட்டிங்

படம்
மார்ஜோரி ஸ்வீட்டிங் ( Marjorie Mary Sweeting ) 1920-1994 இங்கிலாந்தின் லண்டன் நகரில் பிறந்தவர்.  மார்ஜோரியின் தந்தை லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி புவியியல் ஆசிரியர்.  மார்ஜோரி, கேம்பிரிட்ஜில் உள்ள நியூன்ஹாம் கல்லூரியில் புவியியலைக் கற்றார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியதால் படிப்பைக் கைவிட்டு, நார்த் வேல்ஸில் உள்ள டென்பிக் என்ற இடத்திற்கு சென்றார்.  இருந்த அங்கிருந்த ஹோவெல்ஸ் பள்ளிக்கு புவியியல்  ஆசிரியராக பணியாற்றினார்.   1943ஆம் ஆண்டு, தனது வேவ் ட்ரோ எக்ஸ்பரிமென்ட்ஸ் ஆன் பீச் புரோஃபைல்ஸ் என்ற ஆய்வுக்கட்டுரையை தி ஜியோகிராபிகல் ஜர்னல் இதழில் வெளியிட்டார். 1948-1951ஆம் ஆண்டு வரை முனைவர் ஆய்வில் ஈடுபட்டவர், ஆக்ஸ்ஃபோர்டில் உதவித்தொகை பெற்றார். கூடவே, செயின்ட் ஹியூ கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.   1977ஆம் ஆண்டு, சீனாவிற்கு குகைகளை ஆராயச் சென்றார். அங்கு, 5 லட்சம் சதுர கி.மீ. பரப்பில் அமைந்திருந்த சுண்ணாம்புக்கல் பாறைகளை ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதிய ஒரே வெளிநாட்டு புவியியலாளர் மார்ஜோரி தான். இவர், பல்வேறு நாடுகளில் உருவாகியுள்ள பாறை வடிவங்களைப் பற்றி ஆராய்ந்தவர். இத்துறைக்கு கார