இடுகைகள்

மாற்றுப்பாலின சாதனையாளர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் தேர்ந்தெடுத்த மகத்தான அரசியல்வாதி! - டாமி பேல்ட்வின்

படம்
விக்கிப்பீடியா மாற்றுப்பாலின சாதனையாளர்கள் டாமி பேல்ட்வின் 1962 ஆம் ஆண்டு பிறந்த டாமி பேல்ட்வின், விஸ்கான்சின் மாநில உறுப்பினராக உள்ளார். 1998 ஆம்ஆண்டு  தன்னை ஓரினச்சேர்க்கையாளராக அறிவித்தார். இவரின் சிறப்பான செயல்பாடுகள் அடிப்படையில் மக்கள் இவரை தம் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு டாமி பேல்ட்வின் முதல் மாற்றுப்பாலினத்தவர் உறுப்பினராக தேர்வானார். தற்போது மாற்றுப்பாலினத்தவருக்கான மசோதா ஒன்றை உருவாக்கியுள்ளார். இம்மசோதா சபையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இந்த முயற்சி முக்கியமானது. மாற்றுப்பாலினத்தவரை தீண்டாமைக்கு உள்ளாக்குவதைத் தடுக்கும் அரசு மசோதா இது. தற்போது ஜனநாயக கட்சி உறுப்பினரான பேல்ட்வின், விஸ்கான்சின் மாநிலத்தில் மேடிசன் நகரில் பிறந்தார். 2017 ஆம் ஆண்டு இவரது தாய் காலமானார். சிறுவயது முழுவதும் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தார். காரணம், தாய்க்கு இருந்த மனநலப்பிரச்னையும், போதை அடிமைத்தனமும்தான். இவரது தாத்தா யூதர், பாட்டி ஆங்கிலேயர். 1980 ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பையும், 1984-89 இல் கல்லூரி படிப்பு முடித்து பட்டதாரியானார

விண்வெளி சாதனை செய்த ஓரினச்சேர்கையாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் சாலி ரைட் அமெரிக்காவின் முதல் பெண் விண்வெளி வீரர். விண்கலன் இயக்குநர் என்ற பெருமை கொண்ட இவரால், பல நூறு பெண்கள் அறிவியல்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதையும் எங்கும் மறைக்கவில்லை. தன் பணியோடு தனிப்பட்ட வாழ்க்கையை தூரமாக வைத்திருந்தார். டாம் ஓ சானெசி என்ற பெண் துணையை  எழுத்துப்பணி, ஆராய்ச்சிப்பணி, குடும்பம் எங்கும் மறைக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து எழுதினர், ஆராய்ச்சி செய்தனர். சாலி ரைட் சயின்ஸ் நிறுவனத்தில் இணை நிறுவனர் டாம்தான். சாலி, தன் வாழ்க்கையை பெரியளவு யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அதேசமயம் தன்னை மறைத்துக்கொண்டு சாதனைகளை விளம்பரப்படுத்திக்கொள்ளவும் இல்லை. நாசாவில் அவர் முதல் பெண் ஆய்வாளராக பணிபுரிந்தார். அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது அங்கு தெரிந்த செய்தியாகவே இருந்தது என செய்தியைப் பகிர்கிறார் சாலி ரைட்டின் சுயசரிதையை எழுதிய எழுத்தாளரான லின் ஷெர். சாலி, கணையப் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். நன்றி: அவுட்.காம் தமிழில்: வின்சென் காபோ

புகைப்படம் மூலம் மாற்றம் வரும் - ஜனேலா முகோலி

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜனேலா முகோலி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர். புகைப்படம்  எடுப்பதே இவரது வாழ்க்கை. அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதற்காகவே பல்வேறு உதவித்தொகைகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்தவருக்கு, ஐந்து சகோதர சகோதரிகள் உண்டு. பெற்றோர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் புகைப்படம் தொடர்பான படிப்பையும், ஓவியக்கலை படிப்பை டொரண்டோவிலும் முடித்தார். ஆப்பிரிக்கர்கள், இனபாகுபாடு தொடர்பான ஓவியங்கள், கலைப்படைப்புகள் ஜனேலாவின் பெயரை உலகிற்கு அறிவித்தன. 2009 ஆம் ஆண்டு Inkanyiso எனும் அமைப்பை நிறுவி மாற்றுப்பாலினத்தவர்களின் உலகை ஆவணப்படுத்த முயன்றது இவரது மகத்தான பங்களிப்பு, புகைப்படம் வழியாக மக்களுக்கு தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனேலா உருவாக்கினார். இவரது பணியை டபிள்யூ இபி டுபோய்ஸூடன் ஒப்பிடுவது இவருக்கு கிடைத்த பெருமை. 2012 ஆம் ஆண்டு ஜெனேலா ஜெர்மனியில் உருவாக்கிய டாக்குமெண்டா எனும் கண்காட்சியில் பெரும் புகழ் பெற்றார். ஃப்யூ(FEW)  எனும் அமைப்பை உருவாக்கி மாற்றுப

ஆண், பெண் சம்பள உரிமைக்காக குரல் கொடுத்த ஆட்சியாளர்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜோகன்னா சிகுர்டர்டோடிர் ஐஸ்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர். அரசு சேவைகளில் பெரிய மாற்றத்தை இவர் உருவாக்கவில்லை. ஆனால் மாற்றுப்பாலினத்தவர் திருமணம் செய்வதற்கான சட்டத்திருத்தங்களை உருவாக்கினார்.  அதன் மூலம் தனது திருமணத்தை நடத்திக்கொண்டார். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கான சட்டத்தை முதன்முதலில் உருவாக்கியது இவர் தலைமையிலான அரசுதான். 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜோகன்னா, ஐஸ்லாந்தின் முதல் பெண் பிரதமர். மேலும் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று சொல்லி ஆட்சி நடத்தினார். 1962-71 ஆம் ஆண்டு விமானநிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார். தொழிலாளர் சங்கத்தின் தீவிரமாக இயங்கியவர் இவர். 1978 ஆம் ஆண்டு சமூக தொழிலாளர் கட்சியில் உறுப்பினரானார். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஐஸ்லாந்தின் பிரதமரானார். ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர் என்ற உரிமையை முதலில் உறுதிப்படுத்தினார். பின்னர் 2010 ஜூலை 27 அன்று, ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். ஐஸ்லாந்தில் 1978 முதல் 2013 ஆம் ஆண்டு வரை உறுப்பினராக இருந்த ஒரே அரசியல்வாதி இவர்தான். இவரைக்