இடுகைகள்

மறதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ

போதைப்பொருட்களை மருத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
        நியூரோமாடுலேஷன் என்றால் என்ன ? நியூரோமாடுலேஷன் என்பதில் நிறைய பிரிவுகள் உண்டு . புரியும்படி சொன்னால் , தேவையான நினைவுகளை வைத்துக்கொண்டு தேவையில்லாதவற்றை மூளையில் இருந்து அகற்றுவது என கூறலாம் . எம்ஐபி படத்தில் மக்களின் நினைவிலிருந்து நினைவுகளை வில் ஸ்மித் சிம்பிளாக ஒரே ஃபிளாஷில் நீக்குவாரில்லையா ? அதேதான் . டிரான்ஸ்கிரானியல் மேக்னடிக் ஸ்டிமுலேஷன் எனும் முறையில் காந்தப்புலத்தைப் பயன்படுத்தி , மூளையில் நடைபெறும் நியூரான் தகவல்தொடர்பை மாற்றி நினைவுகளை அழிப்பதுதான் இதன் நுட்பம் . பொதுவாக இதன்மூலம் நினைவுகளை அழிப்பது மட்டுமன்றி , மூளையில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை கட்டுக்குள் கொண்டுவரலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன . மேலும் , மூளைக்கு அதிக திறனில்லாத மின்சாரத்தை பயன்படுத்தி , செல்களை ஊக்கப்படுத்தும் ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன . இதனால் எதிர்காலத்தில் கிரியேட்டிவிட்டி இப்படியும் தூண்டிவிடப்படலாம் . மருத்துவத்திற்கு பயன்படும் போதைப்பொருட்கள் உள்ளனவா ? சட்டவிரோதமாக விற்கப்படும் அனைத்து போதைப்பொருட்களும் மருத்துவத்தில்பயன்படுத்தப்படுபவைதான் . அதில் சிலவற்ற

அனைத்து விஷயங்களும் நம் நினைவில் இருந்தால்....

படம்
டாக்டர் எக்ஸ் கடையில் பொருட்களை வாங்க போகிறோம். கடைக்காரர் என்ன என்று கண்களை நிமிர்த்து பார்க்கும்போது சொல்ல முடியாமல் போகிறது. மனைவி படித்துப் படித்து சொன்ன பொருட்கள்தான். ஆனால் ஏதோ சிக்கலில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தூள், கறிவேப்பிலை மறந்துபோய்விடுகிறது. மனைவி தாளித்து கொட்டி அர்ச்சனை செய்தாலும் வயசாகுதில்ல என்று சமாளிக்கலாம். ஆனால் உண்மையில் மறப்பது என்றால் என்ன நம் மூளையின் திறன் குறைவு என்று பொருள் கொள்ளலாமா? பதில் - ஆலிவர் ஹார்ட், மெக்ஹில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்.  இல்லை. மறதி, ஒன்றை முழுக்க நினைவிலிருந்து அழிப்பது என்பது குறைபாடு அல்ல. அது இயல்பாக இயற்கையாக மூளையில் நடப்பது. நான் செய்து வரும் ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளேன். நாம் எப்படி சில குறிப்பிட்ட விஷயங்களை படிக்கிறோம். அதனை மீட்டிங்கில், ஐடியா சொல்லுவதற்காக மனதில் குறிப்பிட்ட வித த்தில் கீவேர்டுகள் போட்டு சேமித்து இருப்போம். குறிப்பிட்ட விஷயங்களை பேசும்போது உடனே மூளைக்கு சிக்னல் கிடைக்க அந்த விஷயங்களை எடுத்துப் பேசுவோம். இதேபோல நாம் சேர்த்து வைத்த நினைவுகளை அழிக்கும் செயல்பாடுகளும் தொட

திசை தெரியாமல் போகிறதா? - உங்கள் பிழை அல்ல!

படம்
Cartoon Connie Comics Blog ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு வழி தேடும் திறன் ஏன் மிக குறைவாக உள்ளது? மூளையிலுள்ள முன்புறப்பகுதி வழிதேடும் திறனுக்கானது. ஆனால் இது அனைவருக்கும் அப்படியே செயல்படாது. சிலர், பிறரிடம் வழிகேட்டு ஒரு இடத்தை எளிதாக சென்று சேர்வார்கள். சிலர் அலைந்து திரிந்துதான் சரியான இடத்திற்கு செல்வார்கள். என்னைக்கூட தொலைந்து போய்விடுவான் என எங்கேயும் போக அனுமதிக்க மாட்டார்கள். என்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் நான் புதிய இடங்களுக்கு மிகச்சரியாக, தவறாகச் செல்வேன். தட்டுத்தடுமாறித்தான் அந்த இடங்களை சென்று சேர்ந்துள்ளேன். அதனால் கவலைப்படாதீர்கள். உடனே எக்ஸ்ட்ரோவர்ட், இன்ட்ரோவர்ட் என கிளம்புவார்கள். உள்ளூரில் ஓரிடத்திற்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். நமக்கு காகித த்தில் திருத்தமான பெயர் இருக்கும். எனவே தவறுகள் நடப்பது சிரமம். இதை சாக்காக வைத்து நாலைந்து மனிதர்களோடு பேசுகிறீர்கள். முன்னே பின்னே பார்க்காத கட்ட டங்களை அறிந்துகொள்கிறீர்கள் என்றால் லாபம்தானே? நன்றி:பிபிசி எர்த்