இடுகைகள்

விஞ்ஞானி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீரிழிவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க போராடும் விஞ்ஞானி! லெஜண்ட் - சரவணன் அருள், ஊர்வசி, கீத்திகா திவாரி

படம்
  கோமானே பாடல் - கீத்திகா திவாரி சரவணன் அருள்- தி லெஜண்ட் The லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி, ஊர்வசி ராய்ட்டலா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் இசை – ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் – ஜேடி –ஜெர்ரி   உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி, சரவணன். இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் தனது பால்ய நண்பனின் இறப்பால், பிறப்பிலேயே தொடங்கும் நீரிழிவு நோயைக் குணமாக முயல்கிறார். இந்த ஆராய்ச்சியால் உலகளவில் உள்ள மருத்துவ மாஃபியாக்கள் எரிச்சலாக, சரவணின் கருவுற்ற மனைவி கொல்லப்படுகிறார். இதனால் உடைந்துபோன சரவணன் சோகத்திலிருந்து மீண்டு தனது எதிரிகளை கண்டுபிடித்தாரா, நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்தை உருவாக்கி உலகுக்கு அளித்தாரா என்பதே கதை. நீரிழிவு நோயின் வகைகள், அதில் பாதிக்கப்படும் நோயாளிகள் என கதையை அமைத்து, அதில் மருந்து கண்டுபிடிப்பது, தனது ஆராய்ச்சியை மக்களின் நலனுக்கு அர்ப்பணிப்பது என்ற சமூக கருத்தை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சி செய்து அதை ராயல்டி – ஆதாய உரிமைப்பணம் வாங்காமல் ஒரு நாட்டின் அரசுக்கு ஒப்படைப்பதைத்தான் சரவணன் படம் நெடுக சொல்கிறாரா என தெளிவாக புரிந்துகொள்ள ம

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

படம்
  மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது. மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள். ‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது. அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூ

எனக்கு ஆர்சனிக் நச்சூட்டப்பட்டது பற்றி அரசு அமைப்புகள் அமைதியாக இருப்பது தவறானது! - இஸ்ரோ ஆலோசகர் தபன்மிஸ்ரா

படம்
              தபன் மிஸ்ரா இஸ்ரோ ஆலோசகர் 2017 ஆம்ஆண்டு மே 23 அன்று இஸ்ரோ நிறுவன ஆலோசகரான மிஸ்ரா , பெங்களூருவிலுள்ள நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றார் . அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட உணவில் ஆர்சனிக் நச்சு கலக்கப்பட்டிருந்தது . இப்படி மூன்று முறை அவரைக் கொல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டது . மேலும் அவர் குடியிருந்த வீட்டில் வளாகத்திற்குள்ளும் பாம்புகள் விடப்பட்டன . கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பீதியில் வாழ்ந்துவருகிறேன் என ஊடகத்தில் கூறியுள்ளார் தபன் மிஸ்ரா . விஷத்தால் பாதிக்கப்பட்டவரான நீங்கள்மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறதே ? எனக்கு பைல்ஸ் பிரச்னை உள்ளது . எனது ஆசனவாயில் ரத்தக்கசிவு ஏற்பட்டது . அதற்கு மருந்துகளை தந்தார்கள் . ஆனால் அது கேட்கவில்லை . சந்திப்பு நிறைவுபெற்றதும் நான் அகமதாபாத் சென்றுவிட்டேன் . என்னால் நடக்கவே முடியவில்லை . இண்டிகோ விமானத்திலுள்ள பணியாளர்கள் எனக்கு உதவினர் . அடுத்தநாள் ஸைடஸ் மருத்துவமனைக்கு நான் சென்று சிகிச்சை பெற்றேன் . சிகிச்சை தவறாக அளிக்கப்பட்டிருந்தால் நான் உறுப்புகள் செயலிழந்து இறந்துபோயிருப்பேன் .   இது