இடுகைகள்

சுத்திகரிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புவியியல் - கனிமங்களை அறிவோம்

படம்
  இரும்பு (Iron) பூமியின் அடிப்பரப்பில் இரும்புத்தாது 5 சதவீதம் உள்ளது. இரும்புத்தாது தனியாக கிடைப்பது அரிது. பெரும்பாலும் நிக்கலுடன் சேர்ந்துதான் கிடைக்கிறது. 7.5 சதவீதம் நிக்கல் கலந்த இரும்பின் பெயர், காமாசைட் (Kamacite). 50 சதவீத நிக்கல் கலந்துள்ள இரும்பிற்கு, டேனைட் (Taenite) என்று பெயர். இந்த வகைக்குள் வராமல் உள்ள இரும்பு நிக்கல் கலவைக்கு டெட்ராடேனைட் (Tetrataenite) என்று பெயர். இந்த வகை தாதுவை விண்கற்களில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  மேற்கூறிய தாது வகைகள் துகள்களாக அல்லது வட்ட வடிவில் கிடைக்கின்றன. நிலவு மற்றும் சூரியனில் இரும்புத்தாது இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  பிஸ்மத் (Bismuth) பிஸ்மத், மத்திய காலத்திலிருந்தே மக்களின் பயன்பாட்டில் உள்ளது. 1450ஆம் ஆண்டு ஜெர்மானிய துறவி பாசில் வேலன்டைன் (Basil Valentine), பிஸ்மத் உலோகத்தை முதன்முதலில் குறிப்பிட்டார். பளபளப்பான, வளையக்கூடிய தன்மை கொண்டது.பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கிறது. தகரம், காரீயம், செம்பு ஆகியவற்றுடன் சேர்ந்து தாதுவாக கிடைக்கிறது.  இதனை பிற உலோகங்களோடு இணைத்து உலோக வார்ப்புகளைச் ச

சூரிய சக்தியில் இயங்கும் கடல்நீர் சுத்திகரிப்பு முறை! - எம்ஐடி சாதனை!

படம்
கடல்நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைகள் என்பது அதிக செலவு பிடிக்கக்கூடியது. இதனை எப்படி அனைத்து குடும்பங்களும் பயன்படுத்த முடியும்? அதற்காகத்தான் இந்த கருவி. இதன் மூலம் நூறு டாலர்கள் விலையில் ஒரு குடும்பம் தனக்கு தேவையான குடிநீரைப் பெறலாம். அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி, சீனாவைச் சேர்ந்த ஜியாவோ டாங் பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை கண்டறிந்துள்ளனர். இதன்மூலம், கடல்நீரை மின்சாரமின்றி எளிதாக குடிநீராக மாற்றலாம். இதனால் குடிநீர் பிரச்னையால் கடல்பகுதிகளிலிருந்து வெளியேறும் மக்களை தடுக்க முடியும். இதனின் மாதிரியை எம்ஐடி அமைப்பின் மாடியில் வைத்து சோதனை செய்து வெற்றி கண்டுள்ளனர். இக்கருவியில் நீரை சுத்திகரிக்க பல்வேறு அடுக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மாதிரிக்கருவில் பத்து அடுக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அதிகம் பயன்படுத்தினால் காசும் கூடும். கருவியும் பெரிதாகும். மாதிரியில் பயன்படுத்திய ஏரோஜெல் விலைகூடியது. இதனை சந்தைக்கு கொண்டுவரும்போது விலைகுறைவான மாற்று பொருளை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் எண்ணியுள்ளனர். சூரிய சக்தியை பயன்படுத்தி குடிநீரை சுத்த