இடுகைகள்

அப்டேட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலவச விண்டோஸ் மென்பொருட்கள்!

படம்
  இலவச மென்பொருள்  வினேரோ ட்வீக்கர் (winaero tweaker 1.4) இந்த மென்பொருள் விண்டோசிற்கானது. அதில் நிறுவி பயன்படுத்தும்போது பல்வேறு புதிய பயன்பாடுகளை செயல்படுத்த முடியும். உதாரணமாக தேவையில்லாத கோப்புகளை அழிப்பதோடு, பென் ட்ரைவ்களுக்கு கூட தனி ரீசைக்கிள் பின்னை உருவாக்கிக்கொள்ளலாம். இதனால் அந்த கோப்புகளை அழியாமல் காக்கலாம்.  வின்ஜெட் யூஐ 1.1 (WingetUI 1.1) விண்டோஸ் 10,11 இல் பயன்படுத்தும் புரோகிராம். ஏட் ஆர் ரிமூவ் புரோகிராம் இருக்குமல்லவா? அதேதான். புரோகிராம்களை சேர்த்து நீக்கலாம்.  நிறைய புரோகிராம்களை அப்டேட் செய்வது எளிது. இதில் உள்ள டிஸ்கவர் டேபை அழுத்தினால்,  பிரபலமான மென்பொருட்களை எளிதாக அடையாளம் காணலாம்.  ஃபாஸ்ட்ஸ்டோன் போட்டோ ரீசைசர் 4.4 (Faststone photo resizer) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அப்டேட் ஆகியுள்ளது. இதில் கூகுளின் வெப்பி முறையிலிருந்து ஹெச்இஐசி முறைக்கு எளிதாக மாற்றலாம். இப்படி மாறிய படங்களை ஆப்பிள் கணினிகளில் பயன்படுத்தலாம். கோப்புகளை தேர்வு செய்து அவற்றை ஒரே கிளிக்கில் வேறு கோப்பு முறைக்கு மாற்றலாம்.  இந்த மென்பொருளும் விண்டோசிற்கானது தான்.  Computeractive