சாதனை புரிந்த இளையோர் - தீ விபத்து அலாரம் - சான்யா கில்
சாதனை புரிந்த இளையோர் தீ விபத்து அலாரம் சான்யா கில் அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பதிமூன்று வயதான சான்யா கில் வாழ்கிறார். இவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள உணவகம் ஸ்டவ்வை ஒழுங்காக அணைக்காமல் விட்டதால் தீப்பிடித்து எரிந்தது. அன்று தொடங்கி இன்றுவரை சான்யாவின் அம்மா, சமையல் அறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா என்ற இருமுறை சரிபார்க்கும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சான்யா, எங்கோ நடந்த விபத்து என நினைக்காமல் தீ பற்றும்போதே பயனருக்கு செய்தி, எச்சரிக்கை தெரிவிக்கும் கருவி ஒன்றை அல்காரிதம் எழுதி உருவாக்கியிருக்கிறார். தெர்மல் கேமரா, சிறிய கணினி ஆகியவை சான்யாவின் கருவியில் இணைந்துள்ளன. இவரது கருவி, இரண்டாயிரம் போட்டியாளர்களைக் கடந்து 25 ஆயிரம் டாலர்கள் கொண்ட அறிவியல் பரிசை வென்றிருக்கிறது. இந்த அறிவியல் போட்டிக்கு 65 ஆயிரம் பள்ளி மாணவர்கள் போட்டியிட்டால் அதில் பத்து சதவீதம்பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போது அந்த அறிவியல் போட்டி எந்தளவு கடுமையாக இருக்கும் என புரிந்திருக்கும்தானே? சொசைட்டி ஃபார் சயின்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு,...