இடுகைகள்

யூட்யூப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு,

வீடியோ எடுத்து லட்சம் சம்பாதிக்க முயன்று கம்யூனிச இயக்கத்திடம் மாட்டிக்கொள்ளும் நாயகன்! - லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப்

படம்
  லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப் இயக்கம் மெர்லபா காந்தி விப்லா என்ற இளைஞர், யூட்யூப் சேனல் ஒன்றை நடத்துகிறார். பிறரது போனைப் பிடுங்கி சப்ஸ்கிரைப் செய்யும் நிலை. அவர் தனியாக சில இடங்களுக்கு பயணித்து யூட்யூப் வீடியோ செய்ய நினைக்கிறார். அப்படி செய்ய நி னைத்து மாவோயிஸ்ட்டுகள் உள்ள காட்டுக்கு சென்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் கதை.   படத்தில் இயக்குநர் மெர்லபா காந்தி, மாவோயிஸ்ட் இயக்கம் அதன் கொள்கை, அரசு, அதிலுள்ள அதிகாரிகளால் அமைதிப் பேச்சுவார்த்தை எப்படி தகர்ந்துபோகிறது என்பதையெல்லாம் பேசுகிறார். படத்தில் கம்யூனிஸ்ட் ஒருவரின் மகன்தான் விப்லா. அவருக்கு அப்பாவின் கொள்கையை விட காசுதான் முக்கியம். எனவே யூட்யூப் சேனல் தொடங்கி அப்பாவிடம் ஒரு லட்சம் காசு வாங்கி ஊர்சுற்றி வீடியோ போட்டு காசு சம்பாதிப்பதுதான் நோக்கம் இந்த நேரத்தில் அவர் அவரைப் போலவே வீடியோ பதிவிடும் இன்னொரு நபரைப் பார்க்கிறார். அவர்தான் வசுதா. டிஜிபியின் பெண்.   டெல்லியில் படிக்கும் அவளை சீண்டிவிட்டு கமெண்டுகளைப் போடுகிறான். இதில் கோபமாகும் வசுதா, ஆந்திரப் பிரதேசத்தின் ஆரகு காட்டு

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான

மக்களின் பிரச்னைகளைப் பேசும் பத்திரிகையாளர்! - ரூரல் மீடியா ஷியாம் மோகன்

படம்
ஷியாம் மோகன் ஒளிப்பதிவாளருடன் பழங்குடிகளின் பிரச்னையைப் பேசும் பத்திரிகையாளர்! பேஸ்புக் வந்தபிறகு யூட்யூப் மெல்ல பின்தங்கியது கண்கூடாக தெரிந்தது. ஆனால், அந்தரங்க தகவல்களின் அத்துமீறல், அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு கமுக்கமாக வேலை பார்த்தது எல்லாம் அந்த சமூக வலைத்தள சேவைக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது. கூடவே பெருந்தொற்று காலம் வேறு வர, பேஸ்புக் மெல்ல செல்வாக்கை இழந்தது. அந்த இடத்தில் யூட்யூப் மெல்ல புகழ் பெறத் தொடங்கியது.  இன்று யூட்யூப் மூலம் இந்தியர்கள் சம்பாதிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 6,800 கோடி. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டில் இதன் பங்களிப்பும் உண்டு என 2020 ஆம் ஆண்டு மதிப்பீட்டுபடி கூறியிருக்கிறது ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு.  இந்தியாவில் வாட்ஸ் அப் அமைப்பிற்கு 53 கோடி, யூட்யூப்பிற்கு 44.8 கோடி பயனர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் சமூக வலைத்தள சேவைகளெல்லாம் இதற்கு பின்னர்தான். இப்படி யூட்பூப் வைத்து சம்பாதிப்பவர்கள் தங்களுக்கான இடத்தை எப்படி அடையாளம் கண்டுகொண்டனர் என்பது முக்கியமானது. உலகம் முழுக்கவே இப்போது எழுத்தை விட காட்சிகளைப் பார்க்கவே விரும்புக

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவில் பிறந்தவர் . இதனால் என