இடுகைகள்

உள்நாட்டுப் போர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை!

படம்
  அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை! உலகமெங்கும் நடந்துவரும் உள்நாட்டுப்போர், மத அடிப்படைவாதம் காரணமாக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வாழ வழியின்றி பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 2010-15 காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான Proceedings of the National Academy of Sciences ஆய்விதழில் அகதிகளின் எண்ணிக்கையை கணிப்பது குறித்து துல்லியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.  அகதிகளின் எண்ணிக்கையை பெரும்பாலான நாடுகள் கணிப்பது  தோராயமான அளவீடுகள் மூலமாகத்தான். வாஷிங்டன் பல்கலைக்கழக(UW) ஆராய்ச்சியாளர்கள் சூடோ பேய்ஸ்(Pseudo bayes) முறை மூலம் கணிக்கின்றனர். இதன்படி தொண்ணூறுகளிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையில்  1.3 சதவிகிதம் என அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேசமயம் அகதிமக்களில் 45 சதவிகிதம் பேர் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளதும் முக்கியமான ஆய்வறிக்கைத் தகவல்.  "இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக ஆய்ந்தறிவது சாதாரணமான காரியம் அல்ல. அரசு இம்முயற்சியில் இறங்காதபோது அகதிகளுக்கான வசதிகளை முழுமையாக வழங்கமுடியாது" என்கிறார் புள்ள

உலகப்புகழ் பெற்ற உரைகள் - பேட்ரிக் ஹென்றி

படம்
உலகப்புகழ்பெற்ற பேருரைகள் பிரிட்டிஷ் நாட்டு ராணுவம், அமெரிக்காவைத் தாக்கும் முயற்சியில் இருந்தது. அப்போது பேட்ரிக் ஹென்றி, தன் நாட்டு மக்களை போருக்கு ஆயத்தம் செய்யும்விதமாக உரையாற்றினார். உரையின் முடிவில் மக்கள் போர்தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்து கோஷமிட்டனர். காரணம், உணர்வுபூர்வமாக பேட்ரிக் ஹென்றி ஆற்றிய உரைதான். பேட்ரிக் ஹென்றி 1775 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று பிறந்தவர். அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியாதான்(ரிச் மாண்ட்) இவரின் சொந்த ஊர். சுதந்திரத்தைக் கொடுங்கள் அல்லது இறப்பை பரிசளியுங்கள் - பேட்ரிக் ஹென்றி தமிழில்: ச.அன்பரசு  அமெரிக்காவின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காக என்னளவு இங்கு ஒருவர் சிந்தித்து செயலாற்றியிருக்க முடியாது. அதேசமயம் இந்த விவகாரத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு கோணத்தில் ஒளியில் பார்ப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் கூடத்தான். இதில் நான் மேற்சொன்னவர்கள் மீது எந்த விமர்சனத்தையம் முன்வைக்க விரும்பவில்லை. மேலும் நாம் இன்றுள்ள சூழ்நிலையில் கொண்டாட்டத்திற்கு இடமில்லை. பொழுதுபோக்கவும் எனக்கு ஆர்வம் இல்லை. இன்றும் நம் நாட்டின் முன்னே சிக்கலான சூழலும்