இடுகைகள்

கொலை மிரட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கொடூர அச்சுறுத்தல்! - இணைய மாநாட்டில் பேசப்பட்ட கருத்துகள் ஒரு பார்வை

படம்
  இந்துத்து வா எனும் கொடூர அச்சுறுத்தல் கடந்த மாதம் செப்டம்பர் 10-12 என மூன்று நாட்கள் ஆன்லைன் வழி மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்துத்துவா வேகமாக பரவி வரும் நிலையில் சமூகம், அரசியல், பாலினம், சாதி, மதம், சுகாதாரம், ஊடகம் ஆகியவற்றில் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க ஏற்பாடானது.  இந்த நிகழ்ச்சியை சமூக அறிவியல் நிறுவனங்களும், ஐரோப்பிய அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஏற்பாடு செய்தன. தோராயமாக உலகம் முழுக்க உள்ள 50 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டிற்கு ஆதரவை வழங்கியிருந்தன. இப்படி ஒரு மாநாடு நடைபெறப்போகிறது என செய்தி பரவியதும், அதனை ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்கேற்பவர்களுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள் கொலைமிரட்டல்களை அனுப்பத் தொடங்கினர். சமூக வலைத்தளத்தில் இப்போது அதிகளவு இந்துத்துவ பயங்கரவாதிகள் இருப்பதால், அதில் உள்ள பங்கேற்பாளர்களை கடுமையாக விமர்சித்து பேசத்தொடங்கினர்.  இந்த வகையில் அமெரிக்காவில் இந்து மந்திர் நிறுவன அதிகாரிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் நிறுவனம், ஹிந்து அமெரிக்க பௌண்டேஷன் ஆகியோர் இந்த மாநாட்டிற்கு நாங்கள் ஆதரவு வழங்கமாட்டோம் என தெரிவித்தன.  குடியரசு கட்சியைச் சேர்ந்த

வாழவே வழியில்லாதபோது இலக்கிய விருதை வைத்து என்ன செய்வது? - மனோரஞ்சன் பியாபாரி

படம்
  எழுத்தாளர் மனோரஞ்சன் பியாபாரி மனோரஞ்சன் பியாபாரி மேற்கு வங்க எழுத்தாளர் உங்கள் எழுத்து பல லட்சம் வாசகர்களை ஈர்க்கும் என நினைத்தீர்களா? உங்கள் நூல்களுக்கு விருதுகளும் கூட கிடைத்துள்ளனவே? இல்லை. நான் என்னுடைய முதல் நூலை எழுதியபோது, குறைந்தபட்சம் ரிக்சா ஓட்டுபவனும் மனிதன்தான் என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும் என்று நினைத்தேன். நான் எழுதிய நூல்கள் வெளியாகத் தொடங்கியபிறகு மக்கள் என்னைப் பார்த்த கோணம் மாறியதை உணர்ந்தேன். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் என்னை சந்தித்து உரையாடினர். சிலர் தங்களுடைய பத்திரிகையில் எழுதுவதற்காக அழைத்தனர். இதுபோன்ற மரியாதை எனக்கு இப்போதுதான் கிடைக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், படித்தவர்களோடு பழகுவதற்கான வாய்ப்பைக் கொடுத்தது.  ரிக்சா ஓட்டுபவர்களை யாரும் மனிதர்களாகவே பார்ப்பதில்லை என்று சொன்னீர்கள். நாட்டிலுள்ள ஏழை மக்கள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்களா? நான் என்னுடைய வாழ்க்கையில் சமையல்காரனாக, பாத்திரங்களை கழுவும் வீட்டு வேலைக்காரனாக, ரிக்சா ஓட்டுபவனாக இருந்திருக்கிறேன். இந்த வேலைகளில் நிறைய கஷ்டங்களையும் வசைகளையும் அனுபவித்திருக்கிறேன். மெல்லத்தான் இப்படி வசைகளை