இடுகைகள்

சமையல் கலைஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடற்றவர்கள், அகதிகளுக்காக உணவகம் தொடங்கி நடத்தும் சமையல்கலைஞர்!

படம்
  சமையல் கலைஞர் மாசிமோ பொட்டுரா உணவை வீணாக்காத சமையல்கலைஞர்!  மாசிமோ பொட்டுரா, புகழ்பெற்ற சமையல்கலைஞர். இவர் இத்தாலியில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் உணவகம் ஒன்றைத் தொடங்கினார். இவரது உணவு தயாரிப்பு என்பது, அன்று கடைக்கு வரும் காய்கறிகளைப் பொறுத்ததுதான். ஒருநாள் கோழிக்கறியும், ஆரஞ்சுப்பழங்களும் கிடைக்கிறது என்றால் அவற்றை வைத்து உணவு வகைகளை உருவாக்குகிறார்.  இந்த வகையில் உணவுப்பொருட்களை வீணாக்காமல் இருக்க  தனி உணவகங்களை தொடங்கியுள்ளார். இதன் பெயர், ரெஃபெடோரியோ அம்புரோசியானோ. உலகம் முழுக்க 13 உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவற்றை உண்மையில் சூப்களை செய்யும் இடம் என்றே அழைக்கவேண்டும்.ஆனால் பொட்டுரோ அதனை அப்படி அழைப்பதில்லை.  அகதிகள், வேலையற்றவர்கள், வீடற்றவர்கள் ஆகியோருக்கு இலவச உணவுகளை தனது உணவகத்தில் வழங்கி வருகிறார். இலவசமாக கொடுத்தாலும் உணவு உண்ண வருபவர்களை கௌரவமாக நடத்தவேண்டும் என எண்ணுகிறார். தனது உணவகத்தில் உள்ள அனைத்து சமையல் கலைஞர்களிடமும் பொட்டுரோ பொருட்களை முடிந்தளவு வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.   “ உணவு வீணாவதை எனது பாட்டி எப்போதும் விரும்பியதில்லை. அதற்கு தீர்