இடுகைகள்

கரன் ஹாப்மன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவு வழியாக மறுகாலனியாதிக்கம் -உஷார்!

படம்
நேர்காணல் கரன் ஹாப்மன் குளிர்பானங்கள், உணவு ஆகியவை நம் மனநிலை மாற்றங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறதா? உணவு, குளிர்பானங்கள் துறை என்பது வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை. இவர்களின் ஆவேசமான விளம்பர முறை சத்துகள் இல்லாத குப்பை உணவை சிறந்தது என மக்களை நம்ப வைக்கிறது. இப்படித்தான் உலகமெங்கும் ஒரே வகை உணவு, குளிர்பானங்களை விற்கிறார்கள். இவர்களின் ஒரே குறி, குழந்தைகள்தான். இதனால்தான் கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு அவர்களை பொருட்களை வாங்க வைக்கிறார்கள். அவர்களை குப்பை உணவுகளை வாங்க வைத்து உடல்பருமன் பிரச்னையில் சிக்க வைக்கிறார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் என்னதான் பிரச்னை? இதில் நடவடிக்கை எடுக்க நாடுகள் ஏன் தயங்குகின்றன.  துரித உணவுகள், தெருவில் விற்கப்படும் உணவுகள், கார்பன் சேர்க்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் ஆகியவை பிரச்னைக்குரிய உணவு ரகங்கள். அதிக கலோரி உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இல்லாத இந்த உணவுகள் உலகளவில் உடல்பருமன் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வதால்