இடுகைகள்

சதீஸ் கிருஷ்ணமூர்த்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மார்க்கெட்டிங்கில் மாஸ் மகராஜா ஆவது எப்படி? - மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்- சதீஸ் கிருஷ்ணமூர்த்தி

படம்
      sample/pixabay           மார்க்கெட்டிங் பஞ்சமாபாதகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்வது , அதனை விற்பனை செய்வது என இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை நூலாசிரியர் ஏராளமான உள்நாட்டு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்கியுள்ளார் . மார்க்கெட்டிங்கின் அடிப்படை என்ன , அதில் பிரபல நிறுவனங்களாக இருந்தாலும் செய்த தவறுகள் என்ன , அதனை திருத்திக்கொள்வது எப்படி என விளக்கியுள்ளார் . ஒருவகையில் மார்க்கெட்டிங்கை பற்றி தெரியாதவர்கள் இந்த நூலைப்படித்தால் கூட அதனை எப்படி செய்வது என அடிப்படையைக் கற்றுக்கொள்ளலாம் . பெரிதாக அவர்கள் சாதிப்பார்களோ இல்லையோ , இதில் சதீஸ் கூறியுள்ள தவறுகளை நிச்சயம் செய்யமாட்டார்கள் . அந்தளவு நூலில் ஏராளமான நம் தினசரி வாழ்க்கையில் பயன்படும் பல்வேறு பொருட்களை உதாரணம் காட்டி விளக்கியுள்ளார் . நூலை வாசிக்க உதவுவது சதீஸ் பயன்படுத்தியுள்ள மொழிதான் . நம் தோள் மீது கைபோட்டு நண்பர் ஒருவர் மார்க்கெட்டிங் பற்றி சொல்லிக்கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு மொழியுடன் நூல் உ...

வியாபார வியூகம் அமைப்பது எப்படி? - சதீஸ் கிருஷ்ணமூர்த்தி!

படம்
புத்தக விமர்சனம்! வியாபார வியூகங்கள் சதீஸ் கிருஷ்ணமூர்த்தி கிழக்கு பொதுவாக வியாபாரம் என்பதை தமிழர்கள் மிக ரகசியமாக யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்றே செய்வார்கள். காரணம், தொழில் ரகசியம் லீக்காகி விடக்கூடாது என்பதுதான். இன்றும் கூட அமோல் கமேஷன், டிவிஎஸ், கவின்கேர், செட்டிநாடு குழுமங்கள் செயல்பாடு என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்தால்தான் புரிந்துகொள்ள முடியும். பெருமளவு விஷயங்களை அவர்களாக கூறுவது சாத்தியம் இல்லை. இந்திய தொழிலதிபர்கள் என வரும்போது நிலைமை பரவாயில்லை. தங்களது வெற்றியை மனம் விட்டு கொண்டாடுகிறார்கள். சதீஸ் கிருஷ்ணமூர்த்தி, இந்த நூலில் நிறுவனத்தின் அடிப்படை நோக்கம், திட்டங்கள், செயல்பாடு, மார்க்கெட்டிங், காலத்திற்கேற்ற புதுமை என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். இதன்மூலம், சாதித்த நிறுவனங்கள், இவற்றைக் கண்டுகொள்ளாததால் வீழ்ந்த நிறுவனங்கள் என பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறார். மைக்கேல் போர்ட்டர் என்று எழுத்தாளரின் ஆய்வுக்கட்டுரைகள் நூலெங்கும் விளக்கப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு புகழ்பெற்ற சிவகாசி, அடுத்துவரும் காலமாற்றங்களுக...