இடுகைகள்

ஃபரா இஷ்தியாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுற்றுலாப்பயணிகளால் ஏராளமான பறவைகள் அழிந்துள்ளன! - சூழலியலாளர் பாரா இஷ்தியாக்

படம்
  சூழலியலாளர் பாரா இஷ்தியாக் பறவைகளை அழித்ததே தொற்றுநோய்கள்தான்!  கடந்த இருபது ஆண்டுகளாக பறவைகளுக்கு பரவும் தொற்றுநோய்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறார் ஃபரா இஷ்தியாக். 49 வயதாகும் ஃபரா , பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி தனித்த கவனத்துடன் ஆராய்ச்சி செய்கிறார். அமெரிக்காவில் உள்ள ஸ்மித்சோனியன் மரபணு பாதுகாப்பு மையத்தில் முனைவர் படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன் வழியாக ஹவாயிலுள்ள   பறவைகளுக்கு ஏற்படும் மலேரியா பற்றி ஆய்வுகளை செய்தார்.  ”ஹவாயைச் சேர்ந்த 90 சதவீத பறவைகளை அழிவின் விளிம்பிற்கு தள்ளியதே மலேரியாவும், அம்மை நோயும்தான் ” என்றார் ஃபரா. ஐரோப்பிய கடல் பயணிகளின் வருகையால் பறவைகளுக்கு மலேரியா, அம்மை நோய் பாதிப்பு தொற்றியது. இவற்றுக்கு இயல்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடையாது. எனவே, எளிதாக நோய்தாக்கி பலியாகிவிடுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார்.  கடந்த பத்தாண்டுகளாக இமாலயப் பகுதியில் உள்ள பறவைகளைப் பற்றி ஃபரா ஆராய்ந்து வருகிறார். தனது ஆய்வின் வழியாக மலேரியா ஒட்டுண்ணிகள் எப்படி பரவுகின்றன, அதற்கு உதவும் சூழல் ஆகியவற்றை அடையாளம் கண்டார். பறவைகளைப் பிடித்து ஆய்வுத்தரவுகளை எடுக்க 4