இடுகைகள்

ரஷ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடத்தும் அரசியல் விளையாட்டு

படம்
  அரசியல் விளையாட்டு ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை அங்கு பெரும்பாலான மக்கள் பழங்குடிகள் என்பதால் போர் என்பது எப்போதும் அங்கு நின்றது கிடையாது. நிற்கவும் போவதில்லை. இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா என அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தானை வளைத்து போட முயன்றுகொண்டே இருக்கின்றன.இதனை நேரடியாக, மறைமுகமாக என இரண்டு வகையாகவும் கூறலாம்.  இப்போது அதைப் பற்றி சில தகவல்களைப் பார்ப்போம்.  அமெரிக்கா அமெரிக்க மக்களைப் பொறுத்தவரை இனி அவர்களின் வரிப்பணம் போருக்கு என்று செலவிடப்படாது. அந்நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது சரியில்லை. இந்த வகையில் அமெரிக்க அதிபர், அடுத்த ஆபரேஷன் நமக்குத்தான் என்று சொல்லி பின்வாங்கியது நல்ல விஷயம்தான். அமெரிக்காவை தளமாக கொண்டு தீவிரவாதிகள் இயங்கிய நிலை இனி இருக்காது என அமெரிக்கா நம்புகிறது. இதனை ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள நாடுகளே கூட நம்பாது. உலகின் சூப்பர் போலீஸ் நாடான அமெரிக்கா, இதனை நம்புகிறது. அதோடு அதன் பெருமைமிக்க அந்தஸ்து இருபது ஆண்டு போரில் தோற்று பின்வாங்கியதோடு முடிவுக்கு வந்துவிட்டது. பின்லேடனை அழித்தது மட்டுமே சாதனை என அமெரிக்கா சொல்லிக்கொள்ளலாம்.