இடுகைகள்

சதுப்பு நிலங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சதுப்புநிலங்களை மீட்பது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட!

படம்
  குப்பைகளால் அழியும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்! செய்தி: தமிழகத்திலுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் 8.4 ஜிகா டன்கள் மீத்தேன் வாயு உருவாகி சூழலை மாசுபடுத்துவதாக ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமை உலக சதுப்புநில நாள் அரசு வனத்துறையால் அனுசரிக்கப்பட்டது. இதுதொடர்பான சந்திப்பில் இயற்கை ஆர்வலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் பங்குபெற்று, பள்ளிக்கரணையில் குப்பை கொட்டும் இடமாக மாறிய சதுப்புநிலங்களை மீட்பது குறித்து ஆலோசித்துள்ளனர். பள்ளிக்கரணையில் பல்வேறு இடங்களில் கருவிகளைப் பொருத்தி கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.  மீத்தேன் அதிகரிப்பு நன்னீர் சதுப்பு நிலப்பகுதியான பள்ளிக்கரணையில்  கொட்டப்படும் நகரின் ஒட்டுமொத்தக் கழிவுகளால்  8.4  ஜிகா டன்கள் மீத்தேன் உருவாகி உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் சூழல் ஆராய்ச்சிக் கழக இயக்குநரான ஏ.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.  கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக்கரணையிலுள்ள சதுப்புநிலத்தில் கொட்டப்படும்