இடுகைகள்

அவசரநிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை உருவாக்கிய 5 விஷயங்கள்! - இந்தியா 75

படம்
  இந்தியாவின் அரசியலமைப்பு குறிப்பிட்ட மதிப்புகளை அடிப்படையாக கொண்டதாக கட்டமைக்கப்பட்டது. கடந்த 70 ஆண்டுகளாக இந்த மதிப்புகள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இந்தியா என்று கூறப்படுவதன் அர்த்தமே கீழ்க்காணும் மதிப்புகள்தான்.  ஜனநாயகம் பிரிவினை நடைபெற்று வந்த காலத்திலேயே இந்தியா தனது முதல் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி வந்தது. வாக்காளர் பட்டியலில் அனைத்து மக்களையும் சேர்க்கும் பணி தொடங்க வேண்டியிருந்தது. நாடாளுமன்ற செயலகம் மூலம் இதற்கான ஏற்பாடுகளை அரசியலமைப்பு ஆலோசகர் பிஎன் ராவ் செய்து வந்தார். 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம்,  தேர்தல் ஆணையத் தலைவர் சுகுமார் சென்னுக்கு இப்பணி ஒதுக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் சேர்த்து தொகுக்கும் பணி நிறைவடைந்த ஆண்டு 1949. முதல் நாடாளுமன்ற தேர்தல் 1952ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கியபிறகு வயது வந்தோருக்கான வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டது.  கூட்டாட்சி  1970 தொடங்கி 80 வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் கடுமையான முரண்பாடுகள் எழுந்தன. 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆண்ட

சாதனைப் பெண்கள்- ஆட்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் பங்களித்த பெண்கள்

படம்
        மரியா க்யுட்டெரா டி ஜீசஸ் பிரேசில் நாட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு உழைத்த துணிச்சல் நாயகி மரியா , அவருடைய அப்பாவின் பண்ணையில்தான் வளர்க்கப்பட்டார் . இதனால் அவருக்கு குதிரை சவாரி , விலங்குகளை வேட்டையாடுவது எளிதாக கைவரப்பெற்றது . மேலும் ஆயுதப்பயிற்சியும் எடுத்தார் . பிறகுதான் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் . இப்போராட்டம் 1822 – 1824 ஆம் ஆண்டு நடைபெற்றது . அன்றைய காலத்தில் ராணுவத்தில் இணைந்து போரிட்ட முதல் பெண் இவர்தான் . போர்ச்சூகீசியர்களுக்கு எதிராக போரிட்டவர் , அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடித்து துணிச்சலாக தாக்கினார் . இவரை பிரேசிலின் ஜோன் ஆப் ஆர்க் என்று அழைத்தனர் . ஆண்களைப்போலவே ஆடை அணிவது இவரது பாணி . இவர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரேசில் ராணுவத்தில் மரியா பெயரில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது . ராணுவ சேவைக்காக இம்பீரியல் ஆர்டர் எனும் விருது வழங்கப்பட்டது . 1825 ஆம் ஆண்டு பிரிட்டன் , போர்ச்சுக்கல் ஆகிய இருநாடுகளும் இணைந்து பிரேசிலுக்கு சுதந்திரத்தை வழங்கின . 2   டோலரெஸ் இபாருரி சமூக செயல்பாட்டாளர் அனைவர