இடுகைகள்

கடற்கரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடற்கரை நகரத்தில் காதலனின் அக்காவைக்கொன்ற குற்றவாளியைக் கண்டறியும் இளம்பெண்! சம்மர் ஸ்ட்ரைக்

படம்
  சம்மர் ஸ்ட்ரைக் 2022 கே டிராமா பனிரெண்டு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்     த்ரோ தி டார்க்னெஸ் என்ற கிரைம் தொடர்பான கே டிராமா பனிரெண்டு எபிசோடுகளைக் கொண்டதுதான். கொரிய டிவி தொடர்கள், இப்போது பதினாறு எபிசோடுகளில் இருந்து பனிரெண்டாக குறையத் தொடங்கியுள்ளன. இது கொஞ்சம் நல்லவிஷயம்தான். சம்மர் ஸ்ட்ரைக்கும் அந்தவகையில் ஆறுதலைத் தருகிறது. சக மனிதர்களால் மோசடிக்கு உள்ளான இருவர், கடற்கரை குறு நகரம் ஒன்றில் சந்தித்து காதல்வயப்படுவதுதான் முக்கியமான மையப்பொருள். ஆனால், அதைமட்டுமே சுவாரசியமாக காட்டுவது கடினம். எனவே, அதில் கொலைக்குற்ற வழக்குகளை சேர்த்திருக்கிறார்கள். மோசமில்லை. இந்த தொடரைப் பார்க்க நன்றாகவே இருக்கிறது. வெறும் காதல், பொறாமை என்று இல்லாமல் நிறைய நெகிழ்ச்சியான தருணங்கள், மனிதர்களின் பொறுத்துக்கொள்ள முடியாத சுயநலம், சொத்துக்களை பெற தாழ்ந்துபோகும் மனித குணம், அத்தனையையும் தாண்டி நிற்கும் அன்பு, மனிதநேயம் என தொடர் வசீகரமாக உள்ளது. பல்வேறு பாதிப்புகளை அடைந்த துன்பங்களை அனுபவித்த மனங்கள் ஒன்றாக சேர்ந்து இன்பம் காண்கின்றன. ஒருவருக்கு நேரும் பிரச்னைகள் பிறர் அந்நியமாக கருத

யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி

படம்
  கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு! மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.  2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார்  யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.  கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக

கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ?   வின்சென்ட் காபோ     கடல் ஆமைகள் எப்படி தாங்கள் பிறந்த கடற்கரையை நினைவு வைத்துக் கொள்கின்றன? அவை சூரியனின் இடத்தை மையமாக கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாசனை நுகர்வுத்திறனும் அதிகம். இதனால் அவற்றால் அவை பிறந்த இடத்திற்கு கச்சிதமாக வந்து, இணை சேர்ந்து குஞ்சுகளை மணலில் பிறக்க ஏதுவான நிலையில் விட்டுவிட்டு செல்கின்றன. அப்படி பிறக்கும் குஞ்சுகள் பாதுகாப்பாக பிறந்த இடம் நினைவில் நிற்கும். எனவே, அவையும் அதே கடற்கரைக்கு முழு வளர்ச்சியடைந்த பிறகு வரும். இப்போது மின் விளக்குகளை அதிகம் எரிப்பதால், ஆமைகள் தடுமாறி வருகின்றன. இவற்றை காப்பாற்றவும் ஏராளமான அமைப்புகள் தோன்றியுள்ளன. ஆமைகளின் இன்னொரு சிறப்பம்சம், அவற்றின் புவிஈர்ப்பு விசையை அறியும் தன்மை. மேக்னடோரிசப்ஷென் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். இதன்மூலம் சரியான இடத்தை ஆமைகள் சென்று சேர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தூக்கம் நமக்குத் தேவையா? நேரு நான்கு மணிநேரம்தான் தூங்கினார் என சிலர் ஊக்கமாக பேசுவார்கள். ஆழமான தூக்கம் வரும் நேரத்தை ஒருவர் கண்டுபிடித்துவிட்டால், அந்த நேரம் மட்டுமே கூட தூங்கினால் போதும். ஆனால் அனைவ