இடுகைகள்

கோழிக்கோடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

கொரோனா காலத்தில் ரூ.12 லட்சத்தை வேண்டாம் என்று வாடகைதாரர்களிடம் சொன்ன தொழிலதிபர்!

படம்
      வாடகை வேண்டாம் ! இதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரின் மனிதநேயம் பற்றியதுதான் . கொரோனா காலம் பல்வேறு மனிதர்களைப் பற்றிய கதைகளை பிறருக்கு சொல்லும் சூழலை உருவாக்கியுள்ளது . வேலை இல்லாமல் பல்வேறு வீடுகளில் வாடகையை வேண்டாம் என்று மறுத்த வீட்டு உரிமையாளர்களும் உண்டு . அந்த வகையில் அவர்களுக்கு இழப்பு என்றாலும் சூழலைப் புரிந்துகொண்டு பிறருக்கும் இளைப்பாறுதலை தங்களது செயல் வழியே செய்கிறார்கள் . சிஇ சக்குண்ணி என்றால் கேரளத்தில் யாருக்கும் அடையாளம் தெரியாது . நூற்றுக்கும் மேலான கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் ஆள்தான் அவர் . பொதுமுடக்க காலத்தில் வியாபாரிகளால் கடை வாடகை தரமுடியாது என்று அறிந்தார் . இதனால் கடைக்காரர்களிடம் வாடகையைக் கேட்காமல் தனக்கு வரவேண்டிய ரூ .12 லட்சத்தை இழந்துள்ளார் . இதேகாலகட்டத்தில் பல்வேறு மளிகை , அரிசி ஆகியற்றின் விலை அதிகரித்து விற்கப்பட்டது . ஆனால் சக்குண்ணி தனக்கு நியாயமாக வரவேண்டிய பணத்தை வேண்டாம் என ஒதுக்கியுள்ளார் . 1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு சந்தையில் சக்குண்ணி அண்ட் கோ என்ற சொந்த நிறுவனத்தைக் தொடங்கினார் அதற்கு முன்னர் இவர் சந்த