இடுகைகள்

தனிநபர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

படம்
  உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.  ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது. மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி கையாள்வத