இடுகைகள்

மலோன் முக்வெண்டே லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மருத்துவத்துறையில் இனவெறி அரசியல் உண்டு! - மலோன் முக்வெண்டே - மருத்துவ மாணவர்

படம்
                    மலோன் முக்வெண்டே இருபத்தொரு வயதான மலோன் முக்வெண்டே , லண்டனில் மருத்துவம் படிக்க சேர்ந்தார் . அங்கு அவருக்கு மருத்துவ ஆராய்ச்சிக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளையர்களைப் பற்றியதே . இதில் மிகவும் குறைவாகவே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் , பழுப்பு நிறத்தவர்கள் இருந்தனர் . இவர்களை கருத்தில் கொள்ளாமல் எப்படி நோய்களைப் பற்றிய முழுமையான முடிவுக்கு வருவது என்று நினைத்த மலோன் , இதற்காக நூல் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இணையத்தில் வலைத்தளம் ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறார் . அவரிடம் பேசினோம் . மைண்ட் தி கேப் என்ற முயற்சியைப் பற்றி கூறுங்கள் . எங்கள் கல்லூரியில் நாங்கள் தோலில் ஏற்படும் நோய்களைப் பற்றி படித்தபோது கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே வெள்ளை இனத்தவர்களுடையது . எனக்கு அப்போது தோன்றிய கேள்வி , பிற இனத்தவர்களுக்கு இந்த நோய் மாறுபடுமே , அவர்களுக்கும் இதேபோல இருக்குமா என்பதுதான் . இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்களுக்கு்ம் பதில் தெரியவில்லை . எனவே ஆசிரியர்கள் சிலரின் உதவியுடன் இணைந்து கிடைத்த புகைப்படங்களை இணைத்து கருப்பு நிறத்தவர்களின் தோலின் நி