இடுகைகள்

உக்கிரபுத்தன்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைலண்ட் தீபாவளி!

படம்
அமைதியான தீபாவளி! உலகெங்கும் தசரா, தீபாவளி பண்டிகைகளில் பட்டாசுகளை விண்ணதிர வெடிப்பது சாதாரணம். வெளிநாட்டு பறவைகளின் இனப்பெருக்கத்திற்காக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புனரி, கொல்லுகுடிப்பட்டி மக்கள் பல ஆண்டுகளாக சைலண்ட் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். இவ்விரு கிராமங்களுக்கும் சைபீரியா, நியூசிலாந்து நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் கருப்புத்தலை இபிஸ் பறவை, ஸ்ட்ரோக்ஸ், கார்மொரண்ட், எக்ரெட் உள்ளிட்ட பறவைகளை வரவேற்கும் விதமாக மக்கள் பட்டாசுக்களை வெடிப்பதில்லை. நீர்நிலைகளுக்கு பண்டிகை காலங்களில் வரும் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்து மார்ச் மாதத்தில் குஞ்சுகளோடு குடும்பமாக பறந்துசெல்வது வழக்கம். “பறவைகளின் இனப்பெருக்க காலத்தை இடைஞ்சல் செய்யக்கூடாது என்று நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. பட்டாசு வெடிக்க விரும்பும் சிறுவர்கள் பறவைகளின் ஏரியாக்களை கடந்து இரண்டு கி.மீ தள்ளிச் சென்று பட்டாசுக்களை வெடிக்கிறார்கள்.” என்கிறார் பறவையியல் வல்லுநரான எஸ்.பால்பாண்டி.

தவறான செய்திக்கு விவசாயிகள் பதிலடி!

படம்
வானிலை அறிக்கைக்காக பூட்டு! – புனே வானிலை ஆராய்ச்சிமையம், பருவமழை பற்றிய தப்பும் தவறுமான செய்திகளை வெளியிட்டதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த ‘ஷேட்கரி சங்கர்ஸ் சமிதி’ எனும் விவசாயிகள் அமைப்பு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுத்திய வானிலை ஆராய்ச்சியை மையத்தை பூட்டப்போவதாக மிரட்டல் கடிதம் எழுதியுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவராஜ்நகர் காவல்துறையினருக்கு தங்களுக்கு வந்த அக்கடித நகலை வானிலை மையத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். “வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பருவமழை குறித்த தவறான அறிக்கைகளை உர நிறுவனங்களுடன் இணைந்து அளித்து ரூ.2.5 லட்ச ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். விரைவில் அவர்கள் அலுவலகத்தை மூடவேண்டிவரும்” என்கிறார் ‘ஷேட்கரி சங்கர்ஸ் சமிதி’ அமைப்பைச் சேர்ந்த பாய் கங்காபிஷன் தவாரே. “மக்கள் தாங்கள் விரும்பிய சேவையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இந்தியாவில் உண்டு. எங்கள் சேவையை சரியானமுறையில் செய்துவருகிறோம்” என்கிறார் புனே வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர்

பார்டர் தாண்டி கொன்று போடு - பிட்ஸ்!

படம்
பயணிகள் இல்லாத ரயில்ரூட்! கேரளாவின் கொச்சினிலிருந்து வில்லிங்டன் தீவு வரையில் இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை விரைவில் நிறுத்தப்படவிருக்கிறது. பயணிகள் பற்றாக்குறைதான் பிரச்னை என காரணம் சொல்லியிருக்கிறது ரயில்வே நிர்வாகம்.. மூன்று பெட்டிகளைக் கொண்ட ரயில் செல்லும் தூரம் 9 கி.மீ மட்டுமே. இதனை 50 நிமிஷங்களில் கடக்கும் ரயிலில் ஏறிய பயணிப்பவர்கள் மிக சொற்பம். தினசரி இரண்டு சர்வீஸ் வரும் ரயில் கொச்சின் டெர்மினஸ், எர்ணாக்குளம் ஜங்க்‌ஷன், கொச்சின் போர்ட் ட்ரஸ்ட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மார்க்கமாக செல்கிறது. “இவ்வழித்தடத்தில் தினசரி 15 டிக்கெட்டுகளுக்கும் குறைவாகவே விற்கிறது. எப்படி ரயிலை இயக்கமுடியும்? ” என்கிறார் திருவனந்தபுரம் மண்டல மேலாளர் எஸ்.கே.சின்கா. சேவையை நிறுத்தாமல் திரிசூர் -– கோட்டயம் வரை ரயில்சேவையை விரிவாக்கினால் அதிக பயணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது அவ்வட்டார மக்களின் கருத்து. 2 அகிம்சை தேர்வு மகாராஷ்டிராவில் காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அகிம்சைக்கான தேர்வை 600 கைதிகள் எழுதியுள்ளனர். பாம்பே சர்வோதய மண்டல் என்ற அமைப்பு சிறைக்கைதிகளுக்கு க

தேசியவிருது ஆசிரியர்!

படம்
பெண்கல்விக்கு பாடுபடும் ஆசிரியர்! ஹரியானாவின் மேவத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் பஸ்ருதீன்கான், பெண்குழந்தைகளின் இடைநிற்றல் அளவை குறைத்து ஆசிரியர் தினத்தில் இந்தியப் பிரதமரின் பாராட்டையும் பெற்றுள்ளார். மேவத் நகரில் படிக்கும் மாணவர்களில் 20 சதவிகிதப் பேர் இடைநின்றுவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அறிவியல் மற்றும் கணித ஆசிரியரான பஸ்‌ருதீன்கான், உடான் எனும் தன்னார்வ நிறுவனத்தை தொடங்கி கல்வி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். 1993 ஆம் ஆண்டு ஜார்புரி கிராமத்தில் தன் கல்விப்பணியை 20 மாணவர்களுடன் தொடங்கிய பஸ்‌ருதீன்கான், இரண்டு ஆண்டுகளில் மாணவர் எண்ணிக்கையை 57 ஆக மாற்றிக்காட்டினார். பின் சிரோலி கிராம பள்ளியில் 96 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையை 638 ஆக உயர்த்தி சாதித்தவர், நூறு சதவிகித தேர்ச்சி சாதனையையும் நிகழ்த்தினார். தற்போது தப்பன் நகர நடுநிலைப்பள்ளியில் காலை 7 முதல் இரவு 7 வரை பணியாற்றுகிறார். 25 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றும் பஸ்‌ருதீன்கான், இதுவரை பள்ளியின் அடிப்படை கட்டமைப்புக்காக   என்ஜிஓக்கள் உதவிகோரி ரூ.1.7 கோடி பெற்றுத்தந்துள்ளார். “குழந்தைகளோடு உங்க

கரன்சியை எண்ணியாச்சு!

படம்
சகியா? சகோதரியா? காதலி மூலம் கைகளில் ராக்கி கயிறு கட்ட பள்ளி நிர்வாகம் நிர்பந்தப்படுத்த விரக்தியான காதலன் தற்கொலைக்கு முயற்சித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். திரிபுரா தலைநகரமான அகர்தலாவிலுள்ள பள்ளியில் திலீப்குமார் சாகா படித்து வந்தார். படிப்புடன் காதல் துணையாக பெண்தோழியும் கிடைக்க வீக் எண்டுகள் விசாலமானது. இருவரின் டூயட் பள்ளி நிர்வாகத்தின் காதிற்கு போக, காதலியை சகோதரியாக்க நூதன திட்டத்தை ரக்‌ஷா பந்தனன்று அரங்கேற்றினர். பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு திலீப் மற்றும் அவரது பெண்தோழியின் பெற்றோர்களை அழைத்து அவர்களின் முன்னிலையில் பெண்தோழியை திலீப்புக்கு ராக்கி கட்ட டார்ச்சர் செய்தனர். இருவருமே முடியாது என மறுத்தாலும் மிரட்டல்கள் தொடர, அடுத்த நொடியே இரண்டாம் மாடியிலிருந்து திலீப் குதித்துவிட்டார். தோழி மட்டுமல்ல கூடியிருந்த ஆசிரியர் மாணவர் பரிவாரங்களே அரண்டுபோனது. தற்போது திலீப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சகிதான் கன்ஃபார்ம்! 2 சிறுவனைக் காப்பாற்றிய கஜினி!  மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனை கஜினி டாட்டூ காப்பாற்றியுள

ஊழலுக்கு தண்டனை!

படம்
ஊழலுக்கு நிவாரணநிதி தண்டனை! லஞ்சம் வாங்கி ஊழல் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிபதி பன்ச்குலா, கேரளாவுக்கு நிவாரண நிதி அளிக்கும் புதுமையான அபராத தண்டனையை விதித்துள்ளார். தனியார் கம்பெனிக்கு சென்ற ரெய்டில் அக்கம்பெனியினர் செய்த வரிமோசடிகளை அனில்குமார், அஜய்சிங், ரவிந்தர் தாகியா ஆகியோர் கண்டுபிடித்தனர். உடனே 30 லட்சம் அபராதம் விதிப்பதாக மிரட்டி, அத்தொகையை குறைக்க பத்தே பத்து லட்சரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஆனால் விஷயம் லீக்காகிவிட முதல் தவணையாக கம்பெனியினர் மூன்று லட்சம் தரும்போதே சிபிஐ அதிகாரிகள் மூன்று கருப்பு ஆடுகளையும் வசமாக மடக்கி பிடித்து கேஸ் போட்டுவிட்டனர். இந்த வழக்கில்தான் சிபிஐ வக்கீலே எதிர்பார்க்காதபடி நீதிபதி பன்ச்குலா நிவாரணநிதி தீர்ப்பளித்து அதிர வைத்துள்ளார். அப்போ சிபிஐக்கு என்ன கிடைக்கும் நீதியரசரே?    2 தீவிரவாத குழுக்களில் இளைஞர்கள்! ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதக்குழுக்களில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் மட்டும் 130 இளைஞர்கள்(88-2016) டெரர் குழுக்களில் அட்மிஷன் போட்டுவிட்டனர். காஷ்

ராஜஸ்தான் இனி ஹிந்துஸ்தான்!

படம்
நட்புதின கொண்டாட்டம் ! மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜபல்பூரைச்சேர்ந்த பத்தாம்வகுப்பு மாணவர் , நட்புதினத்திற்காக 46 லட்சரூபாய் செலவழித்து அவரின் குடும்பத்திற்கே ஷாக் கொடுத்துள்ளார் . தொழிலதிபர் தன் வீட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தார் . விசாரணையில் , திருட்டிற்கான அணுவளவு தடயங்களும் வீட்டில் இல்லை . பிறகுதான் ,   தொழிலதிபரின் மகன் நட்பு தினத்திற்காக 46 லட்சரூபாயை திருடி வெள்ளி பிரேஸ்லட் , ஸ்மார்ட்போன்கள் என வகுப்பறையிலுள்ள தோழர்களுக்கு வாரிவழங்கி நவீன கர்ணனாய் பெருமிதப்பட்டது தெரியவந்தது . போலீஸ் சம்மன் அனுப்புவதற்குள்ளாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கார் , பொருட்கள் என வாங்கிவிட கொள்ளையடித்த பணத்தில் 15 லட்சரூபாய் மட்டுமே ரிடர்ன் ஆகியுள்ளது . பணத்தோடு சென்ற தொழிலதிபரின் மகன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை . " இதில் சம்பந்தப்பட்டவர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை " என்கிறார் சூப்பரிடெண்ட் பி . எஸ் . தோமர் . மத்தியப்பிரதேசத்தில் கர்ணன் பிறந்துவிட்டார் ! 2 டிஜிட்டல் ஆவணங்கள் போது