இடுகைகள்

ஆ.ராசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனைகளை செய்தும் கூட அனைத்து புகழையும் விட்டுக்கொடுத்த பிரதமரின் துயரக்கதை! - தற்செயல் பிரதமர் - சஞ்சயா பாரு

படம்
          தற்செயல் பிரதமர் சஞ்சயா பாரு தமிழில் பி . ஆர் . மகாதேவன் கிழக்கு 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பற்றியும் அதில் பிரதமரான பதவி வகித்த மன்மோகன் சிங் பற்றியும் நூல் விலாவரியாக உண்மைகளைப் பேசுகிறது . பிரதமர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரின் ஊடக ஆலோசகரான வணிகப் பத்திரிக்கை ஆசிரியரான சஞ்சயா பாரு , பணியில் சேர்கிறார் . அங்கு அவர் பார்த்த தனிப்பட்ட ஆளுமையான மன்மோகனும் , பிரதமராக இருந்த மன்மோகனும் எப்படி சூழலுக்கு ஏற்ப வெளிப்பட்டார்கள் என்பதை பெரியளவு சமரசப்படாமல் நூலாக எழுதியுள்ளார் . அடிப்படையில் இந்த நூலை யார் படித்தாலும் அவர்களது மனம் காங்கிரஸ் கட்சி , சோனியா காந்தி ஆகிய இரண்டுபேரையும் விரோதமாகவே எண்ணும் . அந்தளவு பல்வேறு அதிகார மையங்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உழைப்புக்கான பலன்களுக்கான பெயர் கிடைக்காமல் அவமானப்படு்த்தப்பட்ட பொருளாதார நிபுணரின் கதை இது . இந்த நூலைப் பொறுத்தவரை மன்மோகன்சிங்கை பலம் , பலவீனத்தை சரியாக எடை போட்டு அணுகுகிறது . கொடுத்த வேலையை சிறப்பாக செய்யும் தன்மை கொண்ட ப