இடுகைகள்

தினு சோலன்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையைத் தேடி-- அமித்தை சுட்டுக்கொன்ற பாஜக எம்.பி

படம்
தகவல் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துபவர்கள் இன்று பலரும் ஆளும் அரசின் ஆதரவுடன் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இப்படித்தான் குஜராத்தின் அகமதாபாத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தகவல்உரிமை செயற்பாட்டாளர், சுட்டுக்கொல்லப்பட்டார். அதுவும் கொலை செய்யப்பட்டது, வழக்குரைஞரும் செயற்பாட்டாளருமான அமித் ஜெதவா என்பதோடு, கொலை நடந்த இடம் உயர் நீதிமன்ற வளாகம் ஆகும். தற்போது இக்கொலைக்கு காரணமான பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் தினு போகா சோலன்கிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சோலன்கி தன்னுடைய ஜூனாகத், கிர் சோம்நாத் ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு கொண்டவர். வணிகத்திற்கு ஏற்றமாதிரி சட்டதிட்டங்களை மாற்றி வந்த பாஜக அரசின் தில்லுமுல்லுகளை அவர்களின் சட்டம் மூலமே கேள்வி கேட்டு மனு போட்டு பதில் பெற்று வழக்கு தொடர்ந்து வந்தார் அமித். அரசியல்வாதியாக இருப்பவர்கள் நிறைய தொழில்களை நடத்தினால்தானே காசு பார்க்க முடியும். சோலன்கி குஜராத்தில் செய்யாத தொழில்கள் கிடையாது. சுரங்கம், பெட்ரோல் முதல் ஐஸ் ஃபேக்டரிகள் வரை நடத்தி வந்தார். இதில் அமித்துக்கும் சோலன்கிக்கும் முட்டிக்கொண்டது குறிப்பிட்ட வழக்கில்தான். சோலன்கியின