இடுகைகள்

காங்கிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயலில் நேர்மையாக இருந்து வெற்றிகண்ட பெருநிறுவன வழக்குரைஞர்! - நயனா மொட்டம்மா

படம்
  நயனா மொட்டம்மா நயனா மொட்டம்மா - கர்நாடக சட்டமன்றத்தொகுதி எம்எல்ஏ நயனா மொட்டம்மா கார்ப்பரேட் வழக்குரைஞராக இருந்து எம்எல்ஏ வாக மாறியவர் கர்நாடக மாநிலத்தின் முடிகெரே தொகுதியில் மொட்டம்மா வெல்லுவார் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மால்நாடு, சிக்மகளூர் என இரு புகழ்பெற்ற பகுதிகளின் செல்வாக்கும் இங்கு உண்டு. இந்த பகுதியில் 1978ஆம்ஆண்டு இந்திராகாந்தி போட்டியிட்டு வென்று பிறகு தேசிய அரசியலில் வெற்றி பெற்றார். மொட்டம்மா 2015ஆம் ஆண்டு தொடங்கி அரசியலில் இருக்கிறார். இந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரை வீழ்த்த தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அதைப்பற்றியெல்லாம் மொட்டம்மா கவலையே படவில்லை.  அதே படங்ளை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து பெண்களை உடைகளை கொண்டு தீர்மானிக்க கூடாது என முகத்தில் அறைந்தது போல பதிவுகளை இட்டார். கர்நாடகாவின் 224 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பெண்களில் மொட்டம்மாவும் ஒருவர். 1957ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை அங்கு போட்டியிட்ட பெண்களின் எண்ணிக்கை 224 என்ற அளவுக்கு கூட உயரவில்லை. மொட்டம

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

நலத்திட்ட உதவிகள்தான் சிறந்த அரசியல் ஆயுதம்! - பிரசாந்த் கிஷோர், தேர்தல் திட்ட வல்லுநர்

படம்
  பிரசாந்த் கிஷோர்  தேர்தல் திட்ட வல்லுநர் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எது? - ஆம் ஆத்மி அல்லது ஃபிளிப்கார்ட்? ஃபிளிப்கார்ட் பாஜகவின் சிறந்த சொத்து எது? அமைப்பு பலம் தான்.  பாஜகவின் பலவீனம் என்ன? மோடியை மட்டுமே நம்பியிருப்பது அரசியல் அல்லது கொள்கை இதில் நீங்கள் அதிகம் விரும்புவது எது? கொள்கை தான். அரசியல்  என்பது அதன் பிறகு வருவதுதான்.  காங்கிரஸ் கட்சியின் பலம் என்ன? அதன் பாரம்பரியம்.  அதன் பலவீனம்? செயலற்ற தன்மை  அடையாள அரசியல் அல்லது நலத்திட்டங்கள் இவற்றில் எது சிறந்த அரசியல் ஆயுதம்? நலத்திட்ட உதவிகள்தான்.  2024ஆம் ஆண்டு எந்த கட்சி இந்தியாவை வழிநடத்தும் என நினைக்கிறீர்கள்? அதை மக்கள் தீர்மானிக்க விட்டுவிடலாம்.  அரசியல் வல்லுநர்களில் யாரேனும் ஒருவர். அவர் வாழலாம் அல்லது மரணித்தும் இருக்கலாம். உங்களின் முன்மாதிரி ஒருவரைக் கூற முடியுமா? இந்தியாவில் அப்படி யாரும் இல்லை. வெளிநாடுகளில் அப்படி இருந்தாலும் எனக்கு யாரையும் தெரியாது. அப்படி அரசியல் வல்லுநர்களைப் பற்றி நான் படித்ததும் கேள்விப்பட்டதும் கிடையாது.  நீங்கள் மதிக்கும் இந்திய அரசியல்வாதி, அவர் இன்று உயிருடன் இருக்கலாம் அல்லது இல்லாமலு

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி

மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

படம்
  சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு 1 கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர்.  ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர்.  தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது.  1920ஆம் ஆண்டு மெட்ர

ஆனந்தபஜார் பத்திரிகை - நூற்றாண்டைக் கொண்டாடும் நாளிதழ்!

படம்
  anandabazar patrika 100 year supplementary 29 oct 2021 ஆனந்த பஜார் பத்திரிகை - நூற்றாண்டு கடந்த சாதனை! குறிப்பிட்ட மொழியில் பணியைத் தொடங்கி, பிறகு அனைத்து மொழிகளிலும் முக்கியமான நாளிதழாக அல்லது ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்பது நிச்சயம் சாதனைதான். அதுவும் குறிப்பிட்ட கொள்கைக்காக நாளிதழைத் தொடங்கியவர்களுக்கு சமரசம் செய்வது மிக கடினமாகவே இருக்கும்.  தமிழிலும் கூட தமிழ்நாட்டிற்காக, அதனை தனிநாடாக்க பத்திரிகை தொடங்கி இன்றுவரை அதற்கான உழைப்பில் இருக்கும் சில பத்திரிகைகள் உண்டு. இப்படி தொடங்கும் பத்திரிகைகளில் உள்ள இயக்குநர், ஆசிரியர் நாளிதழை நடத்துபவர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருப்பது ஆச்சரியமல்ல. அப்படித்தான் நாளிதழை கட்டுப்படுத்தி வைத்து இலக்கை நோக்கி நடத்துகிறார்கள்.  ஆனந்த  பஜார் பத்திரிகை இன்று ஏபிபி ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏபிபி நாடு என யூடியூப் சேனலைப் பார்த்திருப்பீர்கள். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த ஊடக நிறுவனத்தின் டிவி சேனல்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் டிஜிட்டல் வலைத்தளமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் டிவி சேனல்களை தொடங்கலாம். வங்காள மொழியி

காங்கிரஸின் ஆதார் திட்டத்தை பாஜக அரசு சிறப்பாக செயல்படுத்திவருகிறது! - நந்தன் நீல்கேனி, இன்போசிஸ்

படம்
  நந்தன் நீல்கேனி படம் - மின்ட் நந்தன் நீல்கேனி இன்போஸிஸ் துணை நிறுவனர் மில்லினியத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட பழக்கம்? டிவி பார்ப்பதை புதிதாக தொடங்கியிருக்கிறேன். இது மில்லினிய பழக்க வழக்கமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.  டிவியில் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்ன? இன்வெஸ்டிகேட்டிங் அன்னா என்ற நிகழ்ச்சியை இப்போது பார்த்து வருகிறேன்.  நீங்கள் மதிப்பு அளிக்கும் வணிக நிறுவன தலைவர் யார்? உலகளவில் மைக்ரோசாஃப்டின் பில்கேட்ஸ். இந்தியாவில் நாராயண மூர்த்தி, ரத்தன் டாடா, அசிம் பிரேம்ஜி ஆகியோரைக் குறிப்பிடலாம். இப்படி நட்பு பட்டியலில் நிறையப் பேர் உள்ளனர். அண்மையில் காலமான ராகுல் பஜாஜ் கூட என்னுடைய நண்பர்தான்.  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததாக நினைப்பது? ஆதார் கார்ட் திட்டத்தை உருவாக்கியதுதான். இன்றும் கூட அந்த அடையாள அட்டை திட்டம் சிறப்பாக வேலை செய்கிறது. நான் இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வந்துவிட்டாலும் கூட ஆதாருக்கான நான் உழைத்த உழைப்பை மறக்கவே முடியாது.  கூகுள், பேஸ்புக் என இரண்டில் எது குறைந்த தீமை கொண்டது? இரண்டுமே சிறந்த நிறுவனங்கள்தான். கூகுளின் பல்வேறு சேவைகள் உபயோகமானவை

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

படம்
இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ

மேற்கு வங்கத்தை காக்கும் அக்காவும், உலக வங்கியின் நிர்வாக தலைவரான பெண்மணியும்!

படம்
  மம்தா பானர்ஜி  மம்தா பானர்ஜி  அரசியல் தலைவர், மேற்கு வங்கம்.  முதலில் மாநில கட்சியாக இருந்தவர், இப்போது தேசிய கட்சியாக மாறிவிட பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதற்கான பயன்கள் என்ன என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள் அறிவிக்கும்.  கருத்துகளையும் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலானவர் என்று பெயர் பெற்றவர் மம்தா பானர்ஜி. செல்லமாக தீதி. அனைத்திந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர். மேற்குவங்கத்தின் முதல்வராக இருக்கிறார்.  தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சி தொண்டராக தொடங்கினார். மேற்கு வங்கத்தில் இருந்த இடதுசாரி கட்சியை உடைத்து தனது கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்த தற்கு நிறைய இழந்திருக்கிறார். வன்முறையை எதிர்கொண்டிருக்கிறார். இடதுசாரி குண்டர்களின் தாக்குதலில் மண்டையே கூட உடைந்து போயிருக்கிறது. அத்தனையும் பொறுத்துக்கொண்டு அதிகாரத்திற்கு வந்தபிறகு திருப்பி கொடுத்தார். மம்தாவின் ஆளுமை, அதிரடிகளால் இடதுசாரிகள் இன்றுவரை மேற்கு வங்கத்தில் எழ முடியவில்லை.  காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மத்திய அரசின் மந்திரியாக பொறுப்பு வகித்திருக்கிறார். ராஜீவ்காந்தியின் ஆதரவாளராக இருந்தவர், அவர் குண்டுவெ

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

படம்
ஜெய்ராம் ரமேஷ்  ஜெய்ராம் ரமேஷ் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது? நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்? நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே.  திரிணாமூல் காங்க

இந்திய மண்ணில் ஜனநாயக சிந்தனைகளை ஊன்றியவர்! - நேருவின் போராட்டகால சிந்தனைகள்

படம்
  நேருவின் போராட்டகால சிந்தனைகள் தொகுப்பாசிரியர் அர்ஜூன் தேவ் நேஷனல் புக் டிரஸ்ட்  இந்த நூல் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தைப் பற்றி பேசுகிறது. அந்த காலகட்டத்தில் உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் பற்றி நேரு தன் மனதில் தோன்றிய கருத்துகளை எழுதினார். பேசினார். அதன் ஒரு பகுதிதான் தொகுப்பாளர் அர்ஜூன் தேவால் தொகுக்கப்பட்டுள்ளது.  உலகளவில் நடைபெறும் போர், அரசியல் தந்திரங்கள், வல்லரசு தகராறுகள், பொருளாதார வளர்ச்சி என பல்வேறு விஷயங்களில் நேருவின் சிந்தனை ஆச்சரியம் தருகிறது. ஏறத்தாழ இந்தியாவின் முதல் பிரதமராக ஆன  உடனே இவரது சிந்தனைகள் அரசியல் கொள்கைகளாக வடிவம் பெற்றன. அதுவும் கூட நாட்டின் நலனை முன்வைத்துத்தான் . பொதுத்துறை நிறுவனங்கள் இன்று விற்கப்பட்டு வரும் நிலையில் அவர் அந்த நிறுவனங்களை தொடங்கியது மக்களை ஏழ்மையில் வீழ்த்த பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனை கூறிய அடிபொடிகள் கூக்குரலிடுகின்றனர்.  அன்று அரசு முழுப்பொறுப்பில் தனது நிதி முதலீட்டைக் கொண்டு அரசு நிறுவனங்களைத் தொடங்கியிருக்காவிட்டால் மக்களுக்கு பெரும்பாலான சேவைகள் சென்றே சேர்ந்திருக்கிறது. இன்று பொதுதுறை நிறுவனங்களிடமிருந்து

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது

ஏழு ஆண்டுகளில் நொறுங்கிப்போன குடியரசு நாடும், அதன் அமைப்புகளும்!

படம்
              தேசிய ஜனநாயக கூட்டணி ஏழு ஆண்டுகளை ஆட்சியில் கடந்துள்ளது . அதில் நிறைய விஷயங்களை சாதித்துள்ளதாக பெருமையாக பிரசாரம் செய்து வருகிறது . ஆனால் பணமதிப்புநீக்க செயல்பாட்டிற்கு பிறகு பொருளாதாரம் தடுமாறி வருகிறது . ஆத்மாநிர்பார் எனும் சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டு வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்து நிற்பது தடுக்கப்படும் என அரசு கூறியது . ஆனால் இதில் இந்தியா வெல்லவில்லை . வென்றது கொரோனாதான் . இந்தியப் பொருளாதாரம் தற்போது மோசமான நிலையில் நிற்கிறது . கடந்த ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி நான்கு சதவீதத்தில் இருக்கிறது . 2013-14 காலகட்டத்தில் பொருளாதாரம் 1.85 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சீனாவை ஒப்பிட்டால் அவர்கள் 16.64 டிரில்லியன் டாலர்களாக இருந்தது . சேமிப்பு , செலவு செய்யும் அளவு வேலைவாய்ப்பு என அனைத்துமே பாதிக்கப்பட்டிருந்தது . வேலையின்மை அளவு கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து இருந்தது . தனிநபர் வருமான அளவும் கூட 5.4 சதவீதமாக குறைந்துவிட்டது . பொதுநிறுவனங்களை விற்கத் தொடங்கியதால் பட்ஜெட்டில் பற்றாக்குறை சதவீதம் அதிகரித்து வருகிறது . இதன

புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலிருந்து சொட்டும் குருதி! - நொறுங்கிய குடியரசு- அருந்ததிராய்

படம்
                நொறுங்கிய குடியரசு அருந்ததிராய் தமிழில் க . பூர்ணச்சந்திரன் காலச்சுவடு பழங்குடி மக்களை மத்திய அரசு எப்படி நடத்துகிறது என்பதை நூலாசிரியர் ஏராளமான செய்திக்கட்டுரைகள் , நூல்கள் மற்றும் தனது நேரடியாக களத்திற்கு சென்று வந்த அனுபவம் மூலம் விளக்குகிறார் . 194 பக்கங்களை கொண்ட நூலை வாசிப்பவர்கள் யாரும் இதிலுள்ள அவல நகைச்சுவையை ரசிக்காமல் நூலை படிக்க முடியாது . படித்தவுடனே புன்னகைத்துவிட்டு அடுத்த நொடியே அதன் பொருள் உணர்ந்து வருத்தமும் படுவோம் . அந்தளவு தண்டகாரண்ய வனத்தில் நடக்கும் பல்வேறு கனிம வளங்கள் அகழ்ந்தெடுப்பு பணி பற்றிய புள்ளிவிவரங்களை நூலாசிரியர் முன் வைத்துள்ளார் . மன்மோகன்சிங் எப்படி மத்திய அரசில் அங்கம் வகிக்கும்படி சூழல் நேர்ந்தது , அவர் பிரதமரானவுடன் கனிம வளங்கள் அகழ்ந்தெடுக்கும் பணி வேகமெடுத்தது என பல்வேறு செய்திகளை முன்வைத்து பேசப்பட்டிருக்கிறது . அச்சமயம் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சுகளை எப்படி ஆழமாக புரிந்துகொள்வது என கூறப்பட்டுள்ள பகுதி முக்கியமானது . ஊடகங்கள் எப்படி அரசுக்கு ஆதரவாக பழங்குடி மக்களுக்கு ஆதரவாக போராடும் மாவோ

காங்கிரஸ் கட்சி அரசு ஆளும் மாநிலங்களில் கோவிட் பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம் - சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர்

படம்
            சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் செயல்பாடு தற்போது எப்படியுள்ளது . உங்களது மருமகன் கூட கோவிட் பாதிப்பிலிருந்து இப்போதுதான் மீண்டுள்ளார் அல்லவா ? ராகுலின் செயல்பாடு மேம்பட்டுள்ளது . டாக்டர் மன்மோகன் உட்பட பலரும் பாதிக்கப்பட்டது எனக்கு கவலை அளித்தது உண்மைதான் . மக்கள் இந்நோயினை எதிர்கொள்ள முன் எச்சரிக்கையோடு இருப்பது அவசியம் . மோசமான காலகட்டத்தை நாம் இம்முறையில்தான் கடக்க முடியும் . மத்திய அரசு நோய்தடுப்பிற்காக காங்கிரஸ் கட்சியின் சிந்தனைகளை கேட்டால் அதனை ஏற்பீர்களா ? நிச்சயமாக . எனது பதில் ஆமாம் என்றுதான் இருக்கும் . அந்த காரணத்தினால்தான் நாங்கள் பிரதமருக்கு கோவிட் பிரச்னையை சமாளிப்பதற்கான ஆலோசனைகளை எழுத்துப்பூர்வமாக கொடுத்தோம் . காங்கிரஸ் கட்சி பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல்லாண்டுகள் அனுபவம் கொண்டது . இப்போதுள்ள நிலையில் அரசுக்கு நீங்கள் கூறவேண்டிய அறிவுறுத்தல்கள் என்ன ? இந்தியா தினசரி 7500 மெட்ரிக் டன்கள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து வருகிறது . ஆனால் இன்று தன்னுடைய மக்களுக்கு தேவையான ஆக்சிஜனை தரமுடியவில்லை . எங

இரண்டாவது அலையை கணிக்க தவறியது மத்திய அரசின் குற்றம்தான்! - பூபேந்திரசிங் பாதல் -சத்தீஸ்கர் முதல்வர்

படம்
              பூபேந்திரசிங் பாதல் சத்தீஸ்கர் முதல்வர் - காங்கிரஸ் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு உள்ளதா ? நாங்கள் இரண்டு நாட்களில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளோம் . 45 முதல் 60 வயது கொண்ட 63 சதவீத மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தியுள்ளோம் . அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க வயது வரம்பை தளர்த்த மத்திய அரசிடம் கூறியுள்ளோம் . கொரோனா நோய்த்தொற்று வயது வரம்பின்றி அனைத்து மக்களையும் பாதித்துள்ளது . தற்போது உள்ள இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே வைத்து மக்களை பாதுகாக்க முடியாது . முன்னாள் பிரதமரான மன்மோகன்சிங் கூறியபடி வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதோடு , உ்ள்நாட்டு தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்யவேண்டும் . அப்போதுதான் தடுப்பூசியை மக்கள் அனைவருக்கும் வழங்க முடியும் . மன்மோகன்சிங் எழுதிய கடிதத்தைக்கூட நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள் . அவருடைய கடிதத்திற்கு ஹர்ஷ்வர்த்தன் காங்கிரஸ் தலைவர்கள் , முதல்வர்களை தாக்கி பதில் கூறியிருக்கிறாரே ? இங்கே பாருங்கள் . ஹர்ஷ்வர்த்தன் மரியாதைக்குரிய பதவியில் இருக்கிறார் . அதற்க