இடுகைகள்

மருத்துவம்- தோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எக்ஸிமாவுக்கு புதிய தீர்வு!

படம்
பாக்டீரியா மருத்துவம் ! தோலின் கை மூட்டு , முழங்காலின் உட்பக்கம் என தோன்றும் அலர்ஜி பாதிப்புக்கு குறிப்பிட்ட காரணம் என எதுவும் மருத்துவர்களால் கூறமுடியவில்லை . தோல் ஆரோக்கியமானவர்களிடமிருந்து பெறும் பாக்டீரியாவை பாதிக்கப்பட்டவர்களின் உடலில் செலுத்தி எக்ஸிமாவை தீர்க்கலாம் என அமெரிக்காவிலுள்ள தொற்றுநோய் மற்றும் அலர்ஜி மைய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . தினசரி தோல் பிரச்னைக்கு ஆயின்மென்ட் தடவுவது அல்லது Dupixent எனும் விலைமதிப்பிலான சிகிச்சை மட்டுமே மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது . மனிதர்களின் தோலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை R. mucosa பாக்டீரியா அதிகரிக்கிறது . தோலில் அலர்ஜி , அரிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை இந்த நன்மை பாக்டீரியாக்கள் மூலம் அகற்றினால் நோய் தீரும் என்பதுதான் ஆய்வாளர்களின் எண்ணம் . தற்போது எலிகளிடம் நடைபெற்றுள்ள ஆய்வு நம்பிக்கை தந்தாலும் மனிதர்களிடம் இந்த பாக்டீரியாவை பயன்படுத்தி இன்னும் ஆய்வுகள் நடைபெறவில்லை . பாக்டீரியாவை நேரடியாக எதிர்கொள்ளும் ஆய்வு என்ற அடிப்படையில இது முக்கியமானது .