இடுகைகள்

வயது. இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தத்தெடுத்த குழந்தைகள் திரும்ப ஒப்படைப்பு!

படம்
pixabay 2024-15 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள், தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் பல்வேறு காரணங்களால், அவர்களில் 1,100 குழந்தைகள் அரசு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்ற காரா என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையின் எண்ணிக்கை நாடு முழுக்க தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2014-15 ஆண்டுகளில் 4,362 குழந்தைகள் த த்து கொடுக்கப்பட்டனர். அதில் 387 குழந்தைகள் திரும்ப அரசு அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். 17-18 இல் 4027 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். இதில் 133 குழந்தைகள் திரும்ப அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளனர். காரணம், குழந்தைகளுக்கு அதிக வயது இருப்பதும் அவர்களால் த த்து குடும்பத்துடன் இணைய முடியாததும்தான். “த த்து கொடுத்த குழந்தைகள் திரும்ப காப்பகங்களுக்கு வருவதில் மகாராஷ்டிரமும், மத்தியப் பிரதேசமும், ஓடிசாவும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள குழந்தைகள் தத்து கொடுப்பு மையங்கள் பெயரில் மட்டும் செயல்படுகின்றன. பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் கௌன்சிலிங் கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது ” காரா நிறுவன அதிகாரி.