இடுகைகள்

நூல் விமர்சனம் - பொங்கல் மலர் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துவின் பொங்கல் மலர் எப்படியிருக்கு? ஜாலி அலசல்

படம்
இந்து தமிழ்திசை வழங்கும் பொங்கல் மலர் 2019 ரூ.120 பொதுவாக பொங்கல் மலரில் எதுவெல்லாம் இருக்குமோ அதை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு படைப்பாளர்கள், கலைஞர்களின் ஸ்பெஷலாக பொங்கல் மலரை கொண்டு வந்துள்ளது இந்து தமிழ் திசை. கருப்பசாமி அருவா 40 அடி, கோவில்பட்டி இனிப்பு மிட்டாய் என ஜவ்வு மிட்டாயாக எழுதி வைக்காமல் விடுதலை அளித்ததற்கு ஆசிரியர் அசோகனுக்கு ரைட் ஹேண்டில் வணக்கம் வைக்கலாம். இதழின் சிறப்பாக  புதிய தலைமுறை இயக்குநர்களை நம்பிக்கையுடன் அறுவடைத் திருவிழா அன்று அறிமுகப்படுத்தியதை சொல்லலாம். இதில் விக்ரம் சுகுமாறன், பிரசாத் முருகேசன் பற்றிய பதிவுகள் பிரமாதமாக இருந்தன. தேடல் புதிது, எழுத்து புதிது பக்கம், விரைவில் இந்து இலக்கிய இதழைக் கூட வெளியிடுவார்களோ என்று எண்ணும் படி தரமாக இருந்தது. காந்தி பிறந்து 150 ஆண்டுகளானதை ஒட்டி அவர் குறித்த சிறிய பக்கங்களை ஒதுக்கியது மகாத்மாவுக்கு பொங்கல் நாள் முன்னோர் மரியாதை. பட்டம்மாள், பால சரஸ்வதி ஆகிய இரு ஆளுமைகளுக்கும் நூறாவது ஆண்டு அஞ்சலியாக பத்து கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். நேர்த்தியான பணி. பொங்கல் பற்றிய நினைவுகளை சொல்லுவதில் வடச