இடுகைகள்

நோபல்பரிசு 18 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பொருளாதாரத்திற்கு பரிசு!

படம்
பொருளாதார நோபல்! உலகம் சூழலுக்குகந்த வளர்ச்சியை பெறுவதற்கான திட்டங்களை முன்வைத்த பொருளாதார அறிஞர்கள் வில்லியம் டி நார்டாஸ்(யேல் பல்கலைக்கழகம்), பால் எம் ரோமர்(நியூயார்க் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு பொருளாதார நோபல் வழங்கப்பட்டுள்ளது. சூழலுக்குகந்த உலகை உருவாக்கும் விதமாக கார்பன் வரிகளை உருவாக்கி பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் திட்டங்கள் நார்டாஸ் ஸ்பெஷல் தியரி. 1970 ஆம் ஆண்டிலிருந்து வெப்பமயமாதலை அதிகரிக்கும் கரிம எரிபொருட்களை கட்டுப்படுத்தும் வழிகளை ஆய்வு செய்து வந்தவர் பொருளாதார ஆய்வாளர் நார்டாஸ். பரிசு அறிவிக்கப்பட்ட அதேநேரம் ஐ.நாவின் பருவநிலை கமிட்டி நார்டாஸின் கொள்கைகளையொட்டி அறிக்கையொன்றை உருவாக்கியுள்ளது. சந்தையில் உருவாக்கும் கொள்கைகள் கண்டுபிடிப்புகள் தாக்குப்பிடிப்பதற்கான வழிமுறைகளை ரோமர் ஆராய்ந்துள்ளார். “பொருளாதார நோபல் பரிசுக்கு ஐம்பதாவது ஆண்டில் பரிசுகளை பெற்றுள்ளோம். கார்பன் வெளியீட்டை குறைக்கும் முயற்சியை தொடங்கினால் நிச்சயம் மாற்றமுண்டு” என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ரோமர்.

அறிவியல்துறைகளில் தடுமாறும் பெண்கள் - காரணம் என்ன?

படம்
அறிவியல் உலகில் தடுமாறும் பெண்கள்! அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வாட்டர்லூ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டோனா ஸ்ட்ரிக்லேண்ட்டுக்கு பின்னர்தான் விக்கிபீடியா பக்கமே உருவாக்கப்பட்டது. இயற்பியல் நோபல் வெல்லும் மூன்றாவது பெண் ஆராய்ச்சியாளர் டோனா. 1985 ஆம் ஆண்டு டோனா செய்த ஆராய்ச்சியை கௌரவித்து விருதளிக்கப்பட்டுள்ளது. லேசர் கதிர்களின் தன்மையை அதிகரிக்கும் ஆராய்ச்சிக்காக ஸ்ட்ரிக்லேண்ட் மற்றும் ஜெரார்ட் மௌரூ ஆகியோருக்கு ஒரு மில்லியன் டாலர்கள் இயற்பியல் பரிசுடன் அளிக்கப்பட்டது. இவர்களின் கண்பிடிப்பு துளையிடுவது, வெட்டுவது, அறுவை சிகிச்சை, உற்பத்திதுறை என பலவற்றுக்கும் பயன்படவிருக்கிறது. மௌரூவிற்கு 2005 ஆம் ஆண்டே விக்கிபீடியா பக்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் டோனாவுக்கு இதிலும் புறக்கணிப்புதான்.  வேரா ரூபின், நெட்டி ஸ்டீவன்ஸ், ஹென்றிட்டா லெவிட், ரோசாலின்ட் ஃபிரான்க்ளின் ஆகிய சில பெண்கள் மட்டுமே அறிவியல் துறையில் முன்னர் புகழடைந்தவர்கள். இவ்வாண்டின் ஜனவரியில் வெளியான Pew ஆராய்ச்சியில் ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் பணியாற்றும் பெண்களில் 50 சதவிகிதப்பேர் பணிகளில் பாலி

அமைதிப்பரிசும் நோபல் சர்ச்சைகளும் !

படம்
நோபல் பரிசு 2018! இவ்வாண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பி அலிசன்(70), தசுகி ஹோன்ஜோ(76) என இருவருக்கு புற்றுநோய் ஆராய்ச்சி தொடர்பாக வழங்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு திசுக்களிலுள்ள புரதம் பற்றி செய்த ஆய்வு விருது ஆதாரம். நோய்எதிர்ப்பு அமைப்பிலுள்ள T செல்கள் உடலுக்குள் நுழைந்த பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றுக்கு எதிர்ப்பைத் தொடக்க ஒற்றர்களாய் செயல்பட்டு சிக்னல் கொடுக்கிறது. இவ்வமைப்பு நுண்ணுயிரிகளுக்கு எதிராக சண்டையிடவும், பிற திசுக்களை காப்பாற்றவும் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் டி செல்களிலுள்ள CTLA-4(அலிசன்), PD-1(ஹோன்சோ) ஆகிய புரதங்களை இரு ஆய்வாளர்களும் கண்டறிந்துள்ளனர். இவை புற்றுநோய் தாக்குதலில் உடலின் நோய்எதிர்ப்பு அமைப்புக்கு எதிராக செயல்படுகிறது. இவர்களின் கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படவிருக்கிறது. ஹோன்ஜோ, கியோட்டோ பல்கலையில் பேராசிரியராக பணிசெய்தவர். ஒசாகா, டோக்கியோ, அமெரிக்காவின் தேசிய சுகாதாரக்கழகம் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை செய்துள்ளார். அலிசன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஏ.டி. ஆண்டர்சன் புற்றுநோய் தடுப்பு மையத்