அமைதிப்பரிசும் நோபல் சர்ச்சைகளும் !
நோபல் பரிசு 2018!
இவ்வாண்டிற்கான மருத்துவத்திற்கான
நோபல் பரிசு ஜேம்ஸ் பி அலிசன்(70), தசுகி ஹோன்ஜோ(76) என இருவருக்கு புற்றுநோய் ஆராய்ச்சி
தொடர்பாக வழங்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு திசுக்களிலுள்ள புரதம் பற்றி செய்த ஆய்வு
விருது ஆதாரம்.
நோய்எதிர்ப்பு அமைப்பிலுள்ள T
செல்கள் உடலுக்குள் நுழைந்த பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றுக்கு எதிர்ப்பைத் தொடக்க ஒற்றர்களாய்
செயல்பட்டு சிக்னல் கொடுக்கிறது. இவ்வமைப்பு நுண்ணுயிரிகளுக்கு எதிராக சண்டையிடவும்,
பிற திசுக்களை காப்பாற்றவும் உதவுகிறது. புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் டி செல்களிலுள்ள
CTLA-4(அலிசன்), PD-1(ஹோன்சோ) ஆகிய புரதங்களை இரு ஆய்வாளர்களும் கண்டறிந்துள்ளனர்.
இவை புற்றுநோய் தாக்குதலில் உடலின் நோய்எதிர்ப்பு அமைப்புக்கு எதிராக செயல்படுகிறது.
இவர்களின் கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படவிருக்கிறது.
ஹோன்ஜோ, கியோட்டோ பல்கலையில் பேராசிரியராக
பணிசெய்தவர். ஒசாகா, டோக்கியோ, அமெரிக்காவின் தேசிய சுகாதாரக்கழகம் உள்ளிட்டவற்றில்
ஆய்வுகளை செய்துள்ளார். அலிசன், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஏ.டி. ஆண்டர்சன் புற்றுநோய்
தடுப்பு மையத்தில் தலைவராக உள்ளார். பெர்க்கிலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம்,
நியூயார்க்கிலுள்ள ஸ்லோவன் புற்றுநோய் மையம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.