ஸ்மார்ட்போனில் பிஸினஸ்! - அத்.24


ஸ்டார்ட்அப் மந்திரம் 24! – 

கா.சி.வின்சென்ட்

 

 



Image result for facebook marketplace


இணையம் உள்ளங்கையளவு ஸ்மார்ட்போனில் சுருங்கிவிட எதற்கு தயக்கம்? இந்த டெக்னாலஜியை நன்கு புரிந்துகொண்டதால்தான் தாரிகா ஃபேஸ்புக்கிலேயே தன் கேக்குகளை விற்பனை செய்து சாதிக்கிறார்.

 

ஸ்விட்சர்லாந்தில் வசித்தபோது எக்லெஸ் கேக்குகளை செய்து விற்றுவந்த தாரிகா, கணவரின் வேலைமாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு வந்தார். அப்போது வீட்டிலேயே கேக்குகளை தயாரித்து விற்கலாமே என முடிவு செய்தார். ஃபேஸ்புக் உதவியது; தயாரித்த கேக்குகளின் புகைப்படத்தை ஷேர் செய்ய, ஆர்டர்கள் குவிந்தன.

 

ஃபேஸ்புக் இதற்கென மார்க்கெட் பிளேஸ் என்ற வசதியை வழங்குகிறது. ஆர்டர்களுக்கான தொகையை மொபைல் வாலட் மூலம் பெறமுடியும். ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி கேக், சோப்பு, கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து பலரும் விற்று வருகின்றனர். "நான் ஃபேஸ்புக்கில் 2012 ஆம் ஆண்டு என் பிஸினஸைத் தொடங்கினேன். இன்று தன்வழியாக மட்டுமே 60% வாடிக்கையாளர்கள் எனக்கு உண்டு" என்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான கீர்த்திசிங் கான்ச்ஹவா.

 

தினசரி உபயோகப்பொருட்கள் கடந்து மேக்மைட்ரிப் போன்ற நிறுவனங்கள் 700 க்கும் மேற்பட்ட பெண்களை பயண ஆலோசகர்களாக டிப்ஸ்களைக் கொடுக்க பணியமர்த்தியுள்ளன. “சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பாராட்டுகளோடு பரிசும் வழங்குகிறோம்” என்கிறார் மனிதவளத்துறை தலைவரான யுவராஜ் வஸ்தவா. ஷாப்க்ளூஸ் நிறுவனத்தில் தோராயமாக 2 லட்சம் பெண்கள் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இதில் அவர்களுக்கு குறைந்தது 15 ஆயிரம் - 2 லட்சம் வரை மாத வருமானம் கிடைக்கிறது. வீட்டிலேயே பணிபுரியும் பெண்களுக்கு இம்முறையில் தொழில்வாய்ப்பு வருமானம் கிடைப்பதோடு வேலைநேர சுதந்திரமும் உள்ளது.


"இந்தியாவில் தொழில் செய்வது முதலீட்டுக்கான பணத்தை பெறுவதை விட சவாலான விஷயங்களைக் கொண்டது” என்கிறார் லென்ஸ்கார்ட் துணை நிறுவனர் ப்யூஷ் பன்சால். 2010 ஆம் ஆண்டு தொடங்கிய லென்ஸ் விற்கும் கம்பெனியான லென்ஸ்கார்ட் இன்று ஆன்லைன் வணிகத்தோடு 400 தனி ஸ்டோர்களையும் வைத்துள்ளது. இவ்வாண்டு ரூ.600 கோடி லாபத்தை பெற திட்டமிட்டு உழைத்து வருகிறார் பன்சால். கடந்தாண்டு ரூ.35 லட்சரூபாய் வருமானமாக பெற்று வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் இது.