இடுகைகள்

சீனிவாசன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பத்து திசை உலகம் - ஏயு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
     இந்த நூல் கணியம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அவரின் உரையாடல்தான் நூலை எழுதுவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. அடுத்து, டெம்பிள் மங்கீஸ் யூட்யூப் சேனலின் நிறுவனரான  திரு.விஜய் வரதராஜ் அவர்கள். அவரின் நூல் பற்றிய வாசிப்பு பகிர்தல் எப்போதும் ஊக்கப்படுத்துகிற ஒன்று. இடையறாது தான் வாசிக்கும் நூல்களைப் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார்.  நூலில், ஒருவர் வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவாலான சூழல்கள், அவரது மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, அதற்கான எதிர்வினை என பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசுகிறது. பொதுவாக நாம் நமது தினசரி செயல்பாடுகளை கவனித்தாலே அதில் எந்தளவு கொந்தளிப்பான உணர்ச்சிகளை சகித்து பொறுத்து சூழலைக் கடக்க வேண்டியிருக்கிறது என புரிந்துகொள்ள முடியும். நூலில், அப்படியான பல்வேறு சம்பவங்களை நாம் வாசித்து உணர முடியும்.  ஒருவரின் வலிகளை வாசிப்பவர் புரிந்துகொள்ள முடியலாம். ஆனால் முற்றாக அதை உணர்ந்துகொள்ள முடியாது.  நூலை வாசிக்க...   https://www.amazon.com/dp/B0FLXL14N4

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட இலவச மின்னூல்கள்!

படம்
        கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட நூல்கள் இவை. இப்போதைக்கு ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளம், டெலிகிராமின் இலவச நூல் சேவை சேனல்களில் கிடைக்கிறது. நாளைக்கு யாராவது ஒருவரின் மனம் புண்பட்டால் உடனே ஃப்ரீதமிழ் இபுக்ஸில் இருந்து நீக்கிவிடுவார்கள். டெலிகிராம் சேனலில் அந்த சூழல் வராது என நினைக்கிறேன். எப்படி இருந்தால் என்ன, இலவச நூல் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். அவ்வளவுதான். பூனை எலியைப் பிடித்தால் சரிதான். அதுவரை அதன் நிறம் கறுப்பா, வெள்ளையா என விவாதிக்க தேவையில்லை என சீன முதன்மைத் தலைவர் டெங் ஷியாபோபிங் கூறியது நினைவுக்கு வருகிறது. அதை நாம் நினைவில் கொள்வோம். கிரியேட்டிவ் காமன் உரிமை என்பதால் குற்றவுணர்ச்சியின்றி நூலை தரவிறக்கி வாசியுங்கள். இலவசமாக கொடுத்தால் தரமாக இருக்காது என முன்முடிவோடு நூல்களை புறக்கணிக்காதீர்கள். இந்த நூல்கள் அனைத்து பல்வேறு ஆங்கில நூல்களை, இதழ்களை வாசித்து எழுதப்பட்டவை. தரமானவை.    நன்றி சீனிவாசன், கணியம் வலைத்தள நிறுவனர் எழுத்தாளர் பாலகிருஷ்ண மேனன்

கணியம் சீனிவாசன் செய்த உதவி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பரஸ்பர உதவி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன் . புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள கோப்புகள் அழிந்துவிடும் . கணியம் சீனிவாசன் சார் செய்யும் உதவி இது . முன்னமே கூறியுள்ளது போல அவரின் தளத்திற்கு நிறைய நூல்களை இலவசமாக கொடுத்துள்ளேன் . இதில் என்னுடைய சுயநலமும் உள்ளது . பரஸ்பர சகாயம் என நினைக்கிறேன் . மூன்றாவது மாடியில் ஆட்களின் எண்ணிக்கை கூடிவிட்டது . 14 பேருக்கு 2 கழிவறை 2 குளியலறை உள்ளது . ஆட்களின் வரத்து கூடியதால் , நான் இன்டக்ஷன் ஸ்டவ்வில் சமையல் செய்வது குறைந்துவிட்டது . வயிற்றுக்கு பிரச்னை செய்யாத இடத்தில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறேன் . அலர்ஜி பாதிப்பு எப்போது வெளியே வருமோ ? அன்பரசு 23.12.2021 மயிலாப்பூர் -------------------------------------------------------------------------------------------------------------- பிறரை விற்றுப்பிழைக்கும் சுயநலம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? வேலைகள் இப்போது அதிகரித்துள்ளன . நாளிதழ் பொறுப்பாசிரியர் கட்டுரைகளை முன்கூட்டியே மென்பொருளில...

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்...

திருமண தோல்வியை விவாதிக்கும் சமூகம்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  5.12.2021 மயிலாப்பூர்  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? எனது லினக்ஸ் கணினி பழுதானதால்  இதுவரை எழுதிவந்த கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டது. சோதித்ததில் குப்பைத்தொட்டியில் பார்த்தேன்.  அதை மீண்டும் எழுத வேண்டும். லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது. லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது. கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை. பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அறிவுரை சொன்னார். நல்ல அறிவுரை. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று. வண்டி இப்போது நாயரின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் லபோதிபோ  என கத்துவது, ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது,  இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். 60 பக்கத்தில் எழுதிய நூலை இப்போது திரும்ப ...

2020 நம்பிக்கை இளைஞர்கள் விருது! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வலி உணர்த்தும் நிஜம்! 1.5.2021 அன்புள்ள நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். விகடனில் வரும் அண்டன் பிரகாஷின் தொடரைப் படித்து வருகிறேன். நிறைய விஷயங்களை அவர் இதில் எளிமையாக விளக்குகிறார். இந்தியாவைப் பற்றிய செய்திகள் பலவும் மோசமான எதிர்மறை செய்திகளாகவே இருக்கிறது. இதற்கு நாட்டை ஆள்பவர்களைத்தான் கோபித்துக்கொள்ள வேண்டும். வார இதழ்கள், நாளிதழ்கள் என்ன செய்ய முடியும்?   வலி நிவாரணி பற்றிய நூல் ஒன்றை இணையத்தில் தரவிறக்கினேன். கொரிய தொடர் ஒன்றில் வலி நிவாரண மருத்துவம் பற்றி அறிந்தேன். அதற்கென தனி துறையே இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மனதை நெகிழ்ச்சியாக்கிக் கொண்டு தளர்வாக்கிக் கொள்ள அதிகளவு மருந்துகளைப் பயன்படுத்துபவர்களைப் பற்றி நூல் பேசுகிறது. இதனைத் தடுப்பது எப்படி? இப்படி மருந்துகளை சாப்பிடுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை விவரிக்கிறார்கள். மருத்துவத்துறை சார்ந்த அடிப்படை அறிவையேனும் நூல்களின் வழியே எட்ட முடியும் என நினைக்கிறேன்.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி அவரது செயலர் சஞ்சயா பாரு எழுதிய நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன...

பத்திரிக்கை அரசியல், கற்றலைத் தடுக்கும் பரபரப்பு, கருத்து சுதந்திரம் - கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
        த.சீனிவாசன், நிறுவனர், கணியம்     5 சுதந்திரமான செயல்பாடும் , தடையும் ! 27.1.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் இதழ் குழுவினரை இன்னும் நிர்வாகம் ஆபீசுக்கு வரச் சொல்லவில்லை . இவர்களின் வேகமான செயல்பாடுகளால் மயிலாப்பூரிலுள்ள வாடகை அறையை யும் கூட காலி செய்யவில்லை . ஏதேனும் முடிவெடுத்தால்தான்தானே ? அறைக்கு தங்கினாலும் இல்லாவிட்டாலும் வாடகை தண்டச்செல்வு . உங்களது உதவியால் இப்போது மடிக்கணினி பிரச்னையின்றி இயங்குகிறது . இந்த அளவில் கணினி இயங்குவதே போதும் . இனிமேல் நூலை எழுதி எனது வலைத்தளத்தில் வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்ளவிருக்கிறேன் . பிறரது வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு இனி மின்னஞ்ச்ல்களை அனுப்ப போவதில்லை . சில வலைத்தளங்களில் நூல்களை எந்த அறிவிப்புமின்றி தகவல்களும் சொல்லாமல் வெளியிடுகிறார்கள் . பிறகு அதை நீக்கும்போது மட்டும் இப்படி செஞ்சிட்டீங்களே என பிலாக்கணம் பாடுகிறார்கள் . சுதந்திரமான கருத்துகளுக்கு நிறைய இடங்களில் ஏன் எங்கேயுமே தடைகள் உண்டு . ஸ்டா...

ஆங்கிலம், கல்யாணம், ஆனந்தவிகடன் விருது- கணியம் சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
         த.சீனிவாசன்     ஆங்கிலத்தை வாசிக்கவே அரும்பாடு ! 13.12.2020 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? மனைவி , குழந்தைகள் நலமாக இருக்க பேரிறையைப் பிரார்த்திக்கிறேன் . நான் இந்த வாரம்தான் சென்னை வந்தேன் . தோலில் ஏற்பட்ட ஒவ்வாமை இங்கு குணமாகவில்லை . ஈரோடு சிகிச்சைக்காக சென்றேன் . அங்கு தீவிரமாக மருந்து சாப்பிட்டு சிகிச்சை எடுத்தபிறகு நிலைமை பரவாயில்லை . என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன் . உங்களது வேலை எப்படியிருக்கிறது ? பழக்கமாகிவிட்டதா ? வீட்டிலேயே வேலை செய்யும் முறை எங்களுக்கு புதிது என்றாலும் உங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானதுதான் அல்லவா ? ஆங்கில நூல்களை வேகமாக வாசிக்க முயன்று வருகிறேன் . தமிழ்நூல்களை பழக்கம் காரணமாக வேகமாக படித்து விடுகிறேன் . அண்மையில் பரத்வாஜ் ரங்கன் எழுதிய நூலைப் படிதேன் . இப்போது பில்கேட்ஸ் பற்றி என் . சொக்கன் எழுதிய நூலை படித்து வருகிறேன் . நூல் சுவாரசியமாக இருந்தால்தான் அதனை பிடிஎப் வடிவில் படிக்க முடிகிறது . இந்த அம்சம் இருக்கும்போது , ...