இடுகைகள்

புகையிலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புகையிலையை மேம்படுத்த உதவும் யூரியா? உண்மையா? உடான்ஸா?

படம்
  புகையிலைப் பொருட்களை மேம்படுத்த யூரியா உதவுகிறது! உண்மை. புகையிலையில் மனிதர்களின் சிறுநீரில் காணப்படும் யூரியா மூலக்கூறு, உரமாகப் பயன்படும் டைஅம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியா, ஃபார்மால்டிஹைடு, சாக்லெட் ஆகியவை உள்ளன.  இதனை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ராபர்ட் புரோக்டர் ஆய்வில் உறுதி செய்துள்ளார். அமெரிக்காவிலுள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பும் (CDC) புகையிலையில் யூரியா பயன்படுவதை கண்டறிந்துள்ளது.  2050இல் இந்தோனேஷியாவின் வடக்குப் பகுதி ஜகார்த்தா நகரம் நீரில் மூழ்கும்! யூக உண்மை. வெப்பமயமாதல், சூழல் மாறுபாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இப்படி அறிவியலாளர்கள் கணித்துள்ளனர். இந்தக் கூற்று நடக்கலாம். நடைபெறாமலும் போகலாம். கடல்நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் ஜகார்த்தா நகரம் உறுதியாக நீருக்கடியில் மூழ்க அதிக வாய்ப்புள்ளது.  2019ஆம் ஆண்டு வெளியான வயர் வலைத்தள கட்டுரையில், ஜகார்த்தா நகரம் ஆண்டுக்கு பத்து அங்குலம் நீரில் முழ்கி வருவதாக எழுதப்பட்டிருந்தது.  வாழைப்பழத்தில் 500 வகைகள் உண்டு! உண்மை. நகரத்தில் பெரும்பாலும் விற்பவர்களுக்கு மஞ்சளா, பச்சையா என்று மட்

புகைப்பிடிப்பதை கைவிடுவது எப்படி?

படம்
  புகைப் பிடிக்காதீர்! மேலே சொன்னது போல அரசு அல்லது தனிநபர் என யார் சொன்னாலும் சங்கடம்தான். ஆனால் புகைப்பிடிப்பது பிரச்னை என அதை பின்பற்றுபவர் நினைத்து கைவிட்டால் தான் உண்டு. இப்போது இதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்போம்.  இந்தியாவில் புகைப்பிடிப்பதை கைவிட நினைப்போரின் அளவு 55 சதவீதம். அதில், சரியான ஆதரவு கிடைக்காமல் புகைப்பிடிப்பதை பலரும் கைவிட முடியாமல் தவிக்கின்றனர். 4 சதவீதம் பேர் தான் மனவலிமையால் புகைப்பிடிப்பதை கைவிட்டு அதன் பக்கவிளைவுகளை எதிர்கொண்டு வெல்கின்றனர்.  புகையிலை தொடர்பாக ஏற்படும் நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 27.5 பில்லியன் டாலர்கள்  புகையிலை பயன்படுத்தி உயிரிழப்போரின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும். ஏழு சதவீதம் என்று கூறலாம்.  பெருந்தொற்று காலத்தில் மூன்றில் இருவர் அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிப்பதை கைவிட முயன்றிருக்கின்றனர். இத்தகவலை ஸ்மோக் ஃப்ரீ வேர்ல்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.  அறிவியல் என்ன சொல்கிறது? நிக்கோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி, கௌன்சிலிங், வெரெனிகிலின், பூபுரோப்லான்  என இரு மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களை காப்பாற்ற முயல்கிற

அமெரிக்கா மென்தால் சிகரெட்டுக்கு விதித்த தடை!

படம்
  அமெரிக்காவின் எஃப்டிஏ அமைப்பு, மென்தால் சிகரெட்டுகளையும், பல்வேறு வித ஃபிளேவர்களில் வரும் சிகார்களை தடுக்க திட்டமிட்டுள்ளது. இது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் இளவயதினரை பெரிதும் பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது.  எஃப்டிஏ செய்துள்ள ஆய்வில் 85 சதவீத ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மென்தால் சிகரெட்டுகளை பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.  இதனை வெள்ளையர்கள் 30 சதவீதம்தான் பயன்படுத்துகிறார்கள். நாற்பது வயதிற்கு மேல் இந்த சிகரெட்டுகளை புகைக்கும் அளவு குறைகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.  இந்தியாவின் நிலை இந்தியாவில் அமெரிக்காவில் விதித்த தடை போல எதுவுமே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது. இங்கு புகையிலை, பீடி என்பதற்கு பெரிய மார்க்கெட் உள்ளது. எனவே, பல்வேறு ஃபிளேவர்களில் வரும் சிகரெட்டுகள், சிகார்கள் என்பது மேல்தட்டினர் பயன்படுத்துவதாகவே உள்ளது. எனவே தடை விதித்தாலும்  எப்போதும் போலத்தான். எதுவுமே பயன் அளிக்காது.   இந்தியாவில் புகையிலையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 26.7 கோடி. இவர்களில் பதினைந்து அதற்கு மேல் உள்ளவர்களும் அடங்குவார்கள். இந்த தகவலை குளோபல் அடல்ட் டோபாகோ சர்வே அமைப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக விற்கப்படும் குட்கா, பான்பராக் வகைகள்! - அரசையும் மிஞ்சும் புகையிலை நெட்வொர்க்

படம்
  குட்கா பஞ்சாயத்து! - லாக்டௌனிலும் கல்லா கட்டும் நெட்வொர்க் பொதுமுடக்கமோ, பஞ்சமோ எது வந்தாலும் மது, போதைப்பொருட்களுக்கான தேவை என்பது எப்போதும் குறைவதில்லை. இவை குறைவர கிடைப்பதில் அரசும் இப்போது கவனம் செலுத்தி வருகிறது. வரிவருவாய் என்ற காரணத்திற்காக அரசு மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. போதைப்பொருட்களைப் பொருத்தவரை புகையிலை சார்ந்து செயல்படும் நெட்வொர்க் மிக வலுவானது.  அவசியமான அரிசி, பருப்பு கூட கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழகத்திலுள்ள பெட்டிக்கடைகளில் ஹான்ஸ், கூல் லிப், ஸ்வாகத், ரெனியோ ஆகிய பிராண்டுகள் மிகச்சிறப்பாக விற்கப்பட்டு வருகின்றன. குட்கா, பான்பராக் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தடை செய்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பெரும்பாலான கடைகளில் புகையிலை சார்ந்த பொருட்களை கூடுதல் விலை கொடுத்தால் வாங்கிவிட முடிகிறது. அண்ணாசாலையில் உள்ள சில கடைகளைத் தவிர்த்து பெரும்பாலான கடைகளில் இப்பொருட்களை மூன்று மடங்கிற்கு விலை கூட்டி விற்று வருகின்றனர். போத்தீஸ் ஆடிதள்ளுபடி போல இதிலும் போதை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. விரைவில் கேஷ்பேக் ஆபரும் அறிவிக்கலாம்.   2013ஆம்  ஆண்டு புகையிலைப் பொருட்களுக்கான

புற்றுநோய் தடுப்பதில் இந்தியாவின் இடம் என்ன?

படம்
கொல்லும் புற்றுநோய்! 2018 ஆம் ஆண்டு மட்டும் உலகெங்கும் 9.6 மில்லியன் பேர் புற்றுநோயால் மரணித்துள்ளனர். உலகில் இரண்டாவது பெரிய நோயாக மாறியுள்ளது. இதனால் பொருளாதாரத்தில் ஏற்படும் இழப்பு 1 ட்ரில்லியன் டாலர்கள். 2019 ஆம் ஆண்டு 280 நாடுகள் இதனைத் தடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. புற்றுநோய் ஏற்படும் நாடுகளில் டாப் 5 ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து. குறைவாக புற்றுநோய் பாதிப்பு கொண்ட நாடுகள் எகிப்து, ரோமானியா, சவுதி அரேபியா, இந்தோனேஷியா, கென்யா இந்தியாவின் இடம் 19. புற்றுநோயைத் தடுப்பதில் 64 சதவீத மதிப்பெண்ணை பெற்றுள்ளது. இதில் 45 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள நாடுகள் கொள்கை, செயல்பாடு ஆகியவற்றில் மேம்பாடு தேவை என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மோசமானதாக இருந்தாலும் புற்றுநோயைத் தடுப்பதில் 81.3 சதவீத புள்ளிகளைப் பெற்றுள்ளது. புற்றுநோய் ஆராய்ச்சி, புகையிலையைத் தடுக்கும் கொள்கை ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன்விளைவாக புகையிலைத் தடுப்பில் மொத்தமுள்ள 28 நாடுகளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. ஆனால் ப