இடுகைகள்

எதிர்ப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

படம்
        rediff     இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்! அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும். சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிடலாம். இன்னொருவகையில் அரசிடம்