இடுகைகள்

பேல பெலாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா பற்றிய இரு நூல்கள் - ஒளி ஓவியம், சினிமா கோட்பாடு

படம்
             ஒளி ஓவியம் - சி ஜெ ராஜ்குமார் டிஸ்கவரி புத்தக நிலையம் விலை ரூ.350 புத்தகம் ஒளிப்பதிவாளர்களுக்கானது. நூலும் அதற்கேற்ப வண்ணத்துடன் வழுவழுப்பான தாளில் தயாரிக்கப்பட்டதால் விலையும் கூடுதலாக உள்ளது. உண்மையில் நூல் விலைக்கு நியாயம் செய்துள்ளதா என்றால் ஒளிப்பதிவாளர்கள்தான் கூறவேண்டும். ஒளிப்பதிவாளர்களுக்கு தேவையான விளக்குகள், ஒளியைக் குறைக்கும் கருப்புத் துணிகள், ஒளியை அளவிடும் மீட்டர், படப்பிடிப்பில் பயன்படுத்தும் விளக்குகள், அதிலுள்ள வகைகள் என நிறைய விளக்கங்கள் படங்களுடன் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதைப் பற்றிய புகைப்படங்கள் இருப்பதால் விளக்கு, அதிலிருந்து வரும் ஒளியின் தன்மை ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். வெளிப்புற படப்பிடிப்பு, உட்புற அரங்கில் படப்பிடிப்பு ஆகியவற்றுக்கு உதவும் ஏராளமான விளக்குகள், ஒளியின் வீச்சை தடுக்கும் பொருட்கள், குறிப்பிட்ட கேமரா கோணங்களில் நடிகர்கள் புகழ்பெற்ற விதம், அதற்கான உதாரண திரைப்படங்கள் என நிறைய உதாரணங்கள் உள்ளன. ஒருவகையில் ஒளிப்பதிவில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நூல் என்றே கூறலாம். கோமாளிமேடை டீம் 2 சினிமா கோட்பாடு புதிய கோணம