இடுகைகள்

ஆந்தராக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவின் வாழ்க்கையைக் காக்க தன்னை கறைப்படுத்திக்கொள்ளும் மகன்! - தி பவர் ஆப் டாக் - ஜேன் கேம்பியன்

படம்
  தி பவர் ஆஃப் டாக் தி பவர் ஆப் டாக் ஜேன் கேம்பியன்  1925இல் நடைபெறும் கதை. நியூசிலாந்தின் மான்டனா நகரில் கதை நிகழ்வுகள் நடக்கின்றன. பில், ஜார்ஜ் என்ற இரு சகோதரர்களின் கதை. இருவருக்கும் தொழிலே மாடுகளை மேய்ப்பதுதான். இதற்கென குதிரைக்காரர்கள் இருக்கிறார்கள். இப்படி செல்லும் வாழ்க்கையில் ஜார்ஜ், உணவகம் நடத்தும் பெண் ஒருவரைக் காதலித்து மணம் செய்கிறார். இது பில்லுக்கு பிடிப்பதில்லை. முன்னமே உணவகப்பெண், அவரின் மகன் ஆகியோரை கடுமையாக கேலி செய்தவன் பில்.  இப்படியிருக்கும் நிலையில் பில்லின் வீட்டுக்கே உணவகப் பெண் வர, இருவருக்கும் இடையிலான உறவுச்சிக்கல்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம்.  பெனடிக் கும்பர்பச், படம் நெடுக வெறுப்பை உமிழும் மனிதராகவே வருகிறார்.இவர்தான் பில். தனது சகோதரர், உணவகப்பெண்ணை மணம் செய்துகொள்ளப்போவதை அறிந்து குதிரையை ஆக்ரோஷமாக அடிப்பார். படம் நெடுக்க வெறுப்பும், கோபமுமாக காட்சிகளில் வரும் வெயில் பார்வையாளர்களின் மனதில் வரும்படி நடித்திருக்கிறார்.  கிர்ஸ்டன் டன்ஸ்ட் தான் உணவகப் பெண். இவர் குடிபோதைக்கு அடிமையாகி தவித்துக்கொண்டிருப்பார். இந்த நேரத்தில் பில் செய்யும் கேலிகளால்