இடுகைகள்

விடுதலைப்புலிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலைப்புலிகளை கோரமான கொலையாளிகளாக காட்டும் பிரசாரப் படம்!

படம்
  குற்றப்பத்திரிக்கை இயக்கம் ஆர் கே செல்வமணி ராம்கி , ரகுமான் , ரோஜா , ரம்யா கிருஷ்ணன் ஶ்ரீபெரும்புதூரில் நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையும் , அதற்கு காரணமான விடுதலைப்புலிகள் பற்றிய விசாரணையும்தான் கதை . படம் அரசாங்க பிரசாரப்படம் போலவே எடுக்கப்பட்டிருக்கிறது . அதாவது , படத்தில் ஒரே கோணமே காட்டப்பட்டிருக்கிறது . இந்தியப் பிரதமர் படுகொலை செய்யப்படுகிறார் . அதற்கான திட்டத்தை எப்படி விடுதலைப்புலிகள் தீட்டினர் , செயல்படுத்தினர் . அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரை எப்படி பயன்படுத்திக்கொண்டனர் என்பதைக் காட்டுகிறார்கள் . கூடவே , அரசியல் படுகொலையோடு நிற்காமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளையும் கூட கொல்ல நினைக்கும் கொலைவெறி கொண்டவர்களாக சித்திரிக்கிறார்கள் . அங்குதான் மொத்த படத்தின் நோக்கமே வீழ்ந்துபோகிறது . பார்வையாளர்களை விரக்திக்கு உள்ளாக்குகிறது . படம் பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் வழக்குகளை சந்தித்து வெளியாகியிருப்பதை டைட்டில் கார்டில் காட்டுகிறார்கள் . ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை புகைப்படமாக எடுத்து அதை படத்தில்

வாழ நினைக்கும் ஆன்மாவின் துயரமான ஆசை - இச்சா - ஷோபா சக்தி

படம்
இச்சா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இந்த நூல் பிரான்சில் உள்ள எழுத்தாளர் ஷோபா சக்திக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் பிரதிகளை அளிப்பது போல தொடங்குகிறது. தற்புனைவு வகையில் எழுதப்பட்டுள்ள நூலை கண்ணீர் பெருகாமல் தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக உள்ளது. ஆலா என்ற தமிழ்பெண்ணின் வாழ்க்கைதான் இலங்கை அரசியல், வரலாறு, புலிகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் சொல்லப்படுகிறது. நூலின் செழுமை இதில் புழங்கும் ஏராளமான பழமொழிகள், புதிய சொற்களில் தெரிகிறது. தமிழீழ ஆதரவாளர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பிடித்தமானதாக இருக்காது. ஷோபாசக்தி/vikatan சாதாரணமாக படிப்பவர்களுக்கு அந்த நிலத்தில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு விடுதலை இயக்கம் எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கைப்பாடுகளுக்கு தடுமாறி வரும் தமிழ் மக்களிடம் புலிகள் வலுவில் வந்து உதவி கேட்க பிரச்னைகள் தொடங்குகின்றன. இப்படித்தான் ஆலா என்ற பெண்ணின் வாழ்கையும் இஞ்சி தேநீரை புலிகளுக்கு வழங்கிய பொழுதில் மாறுகிறது. அடுத்த நாள் அவளது தம்பியை வெட்டிக்கொல்கிறது சிங்கள ஊர்க்காவல் படை. இதில் ஏற்