இடுகைகள்

எடிட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜிம்பாவே மண்ணின் இலக்கியத்தை வாழ வைக்கும் வேவர் பதிப்பகத்திற்கு வயது 25!

படம்
  ஜிம்பாவேயின் கதைகளைச் சொல்லும் பதிப்பகம்! ஒரு நாவலை வாசிக்கிறீர்கள். அதன் எழுத்து நடை வசீகரமாக இருக்கிறது. உடனே எழுத்தாளரின் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புகிறீர்கள். ஆனால் உண்மையில், எழுத்தாளர் மையக்கருவை எழுதுகிறார்தான். ஆனால் அதை செம்மைப்படுத்துபவர் ஆசிரியர். ஆங்கிலத்தில் எடிட்டர். இவரை பெரிதாக யாரும் கவனப்படுத்துவது இல்லை. தமிழில் அப்படியான சிறப்பான எடிட்டர் என தமிழினி வசந்தகுமார் அவர்களைக் கூறுவார்கள். இது சற்று வெளியே தெரிந்த விஷயம் என்பதால் கூற முடிகிறது. நிறைய எடிட்டர்கள் தங்களை பெரிதாக வெளிப்படுத்திக்கொள்ளாமல் பதிப்பகங்களின் புத்தக அடுக்குகளில் இருக்கிறார்கள். இப்படியானவர்களை கௌரவப்படுத்த ஒரு விருது கூட இல்லை.  அப்படியானவர்களில் ஒருவர்தான் ஜிம்பாவே நாட்டில் வேவர் பிரஸ் பதிப்பகத்தை நடத்தும் ஐரின் ஸ்டான்டன். இவர், ஏற்கெனவே பதிப்பகத்துறையில்,  இயங்கிய அனுபவம் கொண்டவர். தனது கணவரை லண்டனில் உள்ள ஆப்பிரிக்கா சென்டரில் சந்தித்து பேசி, கரம் பிடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜிம்பாவே வந்து வேவர் பிரஸ்ஸை தொடங்கி நடத்தி வருகிறார்கள். அந்த பதிப்பகத்திற்கு இந்த ஆண்டு இ

உண்மையைச் சொன்னால் மனதுக்கு உறுத்துமே? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?   அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன். இரண்டு இந்தியா  பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். உண்மையத்தான் பேசியிருந்தார். பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி  கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.  கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரின்  கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் திறமையா

அரசியல்வாதிகளைப் பற்றிய உண்மையை பேசிய துணிச்சலான எடிட்டர்! -லக்னோபாய் - வினோத் மேத்தா

படம்
  லக்னோ பாய்  வினோத் மேத்தா பெங்குவின்  அவுட்லுக் வார இதழை தொடங்கியவர். அதன் ஆசிரியராக 1995 முதல் 2012 வரை செயல்பட்டவர். வினோத் மேத்தா வின் வாழ்க்கையை சொல்லும் நூல்தான் லக்னோ பாய்.  பாகிஸ்தானில் பிறந்து பிறகு பிழைப்பு தேடி, லக்னோ நகருக்கு வந்த குடும்பம் வினோத்துடையது. அங்கு அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். இதுவே அவரது பிற்கால வாழ்க்கையை வடிவமைக்கிறது. கலைப்படிப்பை படித்து முடித்தவர் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இந்த நிலையில் அவரது நண்பர் ஆசாத்,  லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு வேலை இருக்கிறது என வினோத்திடம் சொல்லுகிறார். வேலைபார்த்துக்கொண்டே படிப்பதுதான் பிளான். ஆனால் வினோத் அங்கே போய் பார்க்கும்போது நிலை வேறுமாதிரி இருக்கிறது. எட்டு ஆண்டுகள் சிற்சில வேலைகளை செய்து சமாளித்துக்கொண்டு அங்குள்ள அரசியல் நிலைகளை புரிந்துகொள்கிறார். கூடவே, ஏராளமான ஆங்கில நூல்களையும் படிக்கிறார். இதுவே பின்னாளில் அவர் பல்வேறு பத்திரிகைகளை நடத்தவும், புதிய பத்திரிகைகளை தொடங்கவும் மூல காரணமாக அமைந்தது.  ஜார்ஜ் ஆர்வெல்லின் நூல்களை விரும்பி படிப்பவர் என்பதால், இந்த சுயசரி