தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!
மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு. மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள், சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை...