இடுகைகள்

கோ யுன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்