இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பால்புதுமையினரை சமூகம் தானாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்ளாது! - கவிஞர் ஆதித்யா திவாரி

படம்
  ஆதித்யா திவாரி ஆதித்யா திவாரி கவிஞர், பால் புதுமையினர் ஆதரவாளர், செயல்பாட்டாளர் ஜபல்பூரில் பிறந்து வளர்ந்தவரான ஆதித்யா, கடந்த ஆண்டு பிபிசி வாய்ஸிற்கு, ஆறு பகுதிகளாக பாட்காஸ்ட் ஒன்றை தயாரித்து தொகுத்து வழங்கினார். கூடவே, ஓவர் தி ரெயின்போ    - குயிர் ஐகான்ஸ் ஆஃப் இந்தியா என்ற நூலை ஜக்கர்நட் பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரை ஆடியோ சாட் ரூம் ஆப்பான கிளப்ஹவுஸ் வழியே சந்தித்து பேசிய பேட்டி இது. சமூகம் ஏற்றுக்கொண்டபிறகு பால்புதுமையினருக்கான திருமணம் பற்றிய சட்டம் உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நவ்தேஜ் தொடர்பான தீர்ப்பில் பால்புதுமையினர் விவகாரத்தில் எந்த தீண்டாமையும் இல்லை என்ற கூறப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? சக இந்திய குடிமக்கள் போல வாழும் உரிமையைப் பெற பால்புதுமையினர் 2023ஆம் ஆண்டில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் . பால் புதுமையினராக உள்ளதால் உடல் பாகங்களில் உள்ள மாற்றத்திற்காக எங்களுக்கு உரிமைகள் தர மறுக்கப்படுகிறதா? இதற்கு, ‘நீங்கள் சிறுபான்மையினர் ‘என பதில் கூறுகிறார்கள். இதற்காகவே பால்புதுமையினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 37

இந்திய வெளியுறவுக் கொள்கையின் தவிர்க்க முடியாத ஏழு அம்சங்கள்!

படம்
  இந்திய வெளியுறவுக் கொள்கையின் ஏழு தூண்கள் வெளிநாட்டுப் பயணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ள அதிகாரிகள் அப்ரைசல் பெறுவதற்கான முக்கியமான தகுதி, அவர்களுடைய முதலாளி அதாவது, தலைவர் வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறாரா இல்லையா என்பதுதான். அதிகமுறை வெளிநாடுகளுக்கு செல்ல உதவியிருந்தால் அவருக்கு நிச்சயமாக பதவி உயர்வு உண்டு. அதிக நாட்கள் தலைவர் வெளிநாட்டு மண்ணில் இருந்தால், வெளியுறவு அமைச்சகத்தில் அத்றகு உதவிய அதிகாரிகளுக்கு விரைவான வளர்ச்சி சாத்தியம். கட்டி அணைப்பேன் உன்னையே… நாட்டின் தலைவர், உலகின் வலிமையான தலைவர்களைக் கட்டிப்பிடிக்கும்போது அதை புகைப்படமாக, வீடியோ வழியாக பார்க்கும் அனைத்து இந்தியர்களின் நெஞ்சமும் பெருமையால் விம்மும். ஆனால் அப்படி உணர்ச்சி பொங்காதபோது நீங்கள் உடனே அருகிலுள்ள தேசிய புலனாய்வு முகமைக்கு சென்று உங்கள் இதயத்தில் தேசதுரோக கருத்துகள் உள்ளதாக என சோதித்துக்கொள்வது நல்லது. இந்திய வெளியுறவுக் கொள்கையில் தலைவர்களைக் கட்டிப் பிடிப்பது முக்கியமான அம்சம். இதை நீண்ட காலமாக முக்கியமான கொள்கையாக கடைபிடித்து வருகிறார்கள். இதன் மூலம் ஐ.நா பாதுகாப்பு கௌன்சிலில் நிர

கடலில் ஏற்படும் அபாய மாற்றங்களால் உலக நாடுகள் மூழ்கும் அபாயம்!

படம்
    நேரடியாகவும் மறைமுகமாகவும் கடல் ஏராளமான பாதிப்புகளை அடைந்து வருகிறது. கடல் வெப்பமடைவதற்கு முக்கியமான காரணங்கள், சூரிய வெப்பம், மேகங்கள், நீர் ஆவியாகும் செயல்முறை, பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை கடத்தி பிறகு பூமிக்கு கடத்துவது ஆகியவையாகும். மேற்சொன்ன காரணங்கள் மூலம் வெப்ப அலை உருவாகி கடல் மட்டம் மெல்ல உயர்கிறது. கடலிலுள்ள பவளப்பாறைகள் மெல்ல அழியத் தொடங்குகின்றன. மீன்கள் வெப்பம் காரணமாக துருவப் பகுதிகளுக்கு நகரத் தொடங்கியுள்ளன. கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகளவு உள்ளிழுக்கப்பட்டால், அமிலத்தன்மை அதிகரிக்கும். இந்த சூழ்நிலையில் கடல் உயிரினங்கள் அழியத் தொடங்குகின்றன. கடல்மட்டம் உயர்வதால் மாலத்தீவுகள் (இந்தியப் பெருங்கடல்), கிரிபதி (பசிஃபிக் கடல்) ஆகிய தீவுகள் மெல்ல மூழ்கத் தொடங்கியுள்ளன. 2100க்குள் ஒரு மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்தால் தீவுகளில் உள்ள கடற்கரையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் 30 சதவீதத்தை கடல் ஈர்த்துக்கொள்கிறது. இதன் விளைவாக, கடலின் பிஹெச் அளவு மாறி, அமிலத்தன்மை கொண்டதாகிறது. இதன் காரணமாக சில கடல் வாழ்

புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

படம்
  விர்டா ஹெல்த் கேரோஸ் ஜெனரேஷன் ஜீனியஸ் பப்பாயா குளோபல் ரன்வே புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள் தி நார்த் ஃபேஸ் சர்குலர் குளோத்திங் ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ. தெராபாடி வலியைக் குறைக்கும் கருவி வலியில் இருந்து நிவாரணம் தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களத

புதுமையான சிந்தனையால் சாதித்த நிறுவனங்கள் - டைம் வார இதழ்

படம்
  புதிய கண்டுபிடிப்புகள் - சாதித்த நம்பிக்கை தரும் நிறுவனங்கள் கியா அமெரிக்கா புதுமையான மின்வாகனங்கள் தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் முக்கியமான பிராண்டுகளில் ஒன்று.   இந்த கார் உற்பத்தி நிறுவனம் அமெரிக்காவில் சிறப்பாக இயங்குகிறது. குறிப்பாக விலை குறைந்த மின்வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலை பெற்றுள்ளது.   2022ஆம் ஆண்டு பேட்டரியில் இயங்கும் இவி 6 என்ற கார் வர்த்தக ரீதியான நல்ல வரவேற்பும் விற்பனையும் பெற்றுள்ளது. இதன்மூலம் அமெரிக்க சந்தையில் டெஸ்லாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது கியா. 2027ஆம் ஆண்டுக்குள் பதினைந்து மின்வாகனங்களை தயாரித்து விற்க கியா திட்டமிட்டுள்ளது. இந்த பிராண்டை வாங்குபவர்களில் அறுபது சதவீதம் பேர், புதியவர்களே என்பது அதன் பெரும் பலம். கியா காருக்குள் புதிதாக நுழைந்து அதை பார்ப்பவர்கள், முந்தைய கியா காருக்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வார்கள் என கியா நிறுவனத்தின் அமெரிக்க இயக்குநர் சியூங்கியூ யூன் கூறினார். டாஸோ லிப்டன் டீ பிரிவு வணிகம் கடந்த மனிதநேயம் தேயிலை விற்கும் நிறுவனம்தான். ஆனால் அதை செய்யும் வழிவகையில் வேளாண்மை, இயற்கைக்கு

அல்சீமர் பற்றிய கல்வி அனைவருக்கும் தேவை - மருத்துவர் சஞ்தீப் ஜாவ்கர்

படம்
  மை ஃபாதர்ஸ் பிரெய்ன் - அல்சீமர் நூல் சந்தீப் ஜாவ்கர் மருத்துவர் சந்தீப் ஜாவ்கர் இதயவியல் மருத்துவர், அமெரிக்கா அண்மையில் மருத்துவர் சந்தீப், தனது அப்பாவிற்கு ஏற்பட்ட அல்சீமர் நோய் பற்றிய தனது கருத்துகளை, தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். நூலின் பெயர். மை ஃபாதர்ஸ் பிரெய்ன்   - லைஃப் இன் தி ஷாடோ ஆஃப் அல்சீமர்ஸ். தங்களுடைய   பெற்றோர், மனைவி ஆகியோருக்கு அல்சீமர் ஏற்பட்டிருப்பதை ஒருவர் முதல்முறையாக அடையாளம் காண்கிறார். அவர்களுக்கு ஏற்படும் நினைவிழப்பை எப்படி சமாளிப்பது? குறைந்த கால அளவில் ஏற்படும் நினைவிழப்பு என்பது அல்சீமரின் முக்கிய அறிகுறி. இது நோயாளியை கடுமையான விரக்தியில் தள்ளும். விரக்தியும் கோபமுமாக மாறுவார்கள். மேலும், நோயாளிகளை கவனித்தும்கொள்ளும் குடும்ப உறுப்பினர் அல்லது பணியாளர்களுக்கு பொறுமை தேவை. அல்சீமர் வந்த நோயாளிகளுக்கு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் செயல்பாடு குணங்கள் மாறும். எனவே, இதைப் புரிந்துகொள்ள அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நோய் பற்றிய கல்வி தேவை. அல்சீமர் நோய் வந்தபிறகு நோயாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொண்டபடியே உலகம் இயங்குமாறு அனுமதிக்

இயற்கையான காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் காலநிலை மாற்ற பாதிப்பு!

படம்
  காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் வெப்ப அலைகள் உருவாகின்றன. இதன் விளைவாக, காற்றிலுள்ள ஈரப்பதம்,வெப்பமான காற்றால் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது. இதனால் மழைப்பொழிவு தீவிரமாவது, வெள்ள பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. வெப்ப அலைகள் தொடர்ந்தால், நாட்டில் பஞ்சம் ஏற்படும். கடல் பரப்பில் ஏற்படும் அதிக வெப்பம் தீவிரமான புயல்களை, சூறாவளியை ஏற்படுத்துகிறது. இந்த புயல்களின் சராசரி வேகம் மணிக்கு 150க்கும் அதிகம்.   கடலில் ஈரப்பதம் மிக்க காற்று, சூடான காற்று ஆகியவற்றின் சுழற்சி காரணமாக புயல் உருவாகிறது. சூடான காற்று வளிமண்டலத்தில் உயரமாக மேலே சென்று பிறகு குளிர்ந்து குமோலோனிம்பஸ் என்ற மேகங்களாக உருவாகிறது. இந்த மேகம் மூலமே கனமழை பெய்கிறது. அமில மழை , பள்ளிப் பாடங்களிலேயே உண்டு. கரிம எரிபொருட்கள் நீரில் கரைந்து சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலமாக மாறுகிறது. இப்படி வேதிப்பொருட்கள் மழையாக மண்ணில் பொழியும்போது மண்ணின் வளம் கெடுகிறது. நன்னீர் நிலைகள் கெடுகின்றன. மரங்கள் அழியத் தொடங்குகின்றன. மின் விளக்குகளின் வெளிச்சமும் மனிதர்களின் உயிரியல் கடிகாரங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மின்விளக்கு பத்தொன்

'காதல் போதும்' - காதலன், 'செக்ஸ் அவசியம்' - காதலி! மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா

படம்
  மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் - ஜே டிராமா மை ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் மை   ஹாட் செக்ஸ்லெஸ் லவ்வர் ஜப்பான் டிவி தொடர் ஜே டிராமா 9 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப்   தலைப்பில் தெரிகிறது அல்லவா…. அதுதான் கான்செஃப்ட். செக்ஸ் காமெடியை மையப்பொருளாக கொண்ட தொடர். ஷேர்ட் கோ வொர்க்கிங் பிளேஸ் அங்கு நிறையப் பேர் வேலை செய்கிறார்கள். கலைப்பொருட்களை ஆன்லைன் வழியாக வாடகைக்கு கொடுக்கும் நிறுவனத்தில் நாயகி, அவளது கல்லூரி கால தோழி, நண்பன் ஆகியோர் வேலை செய்கிறார்கள். அது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். கல்லூரித் தோழி கேட்டுக்கொண்டதற்காக இந்த தொழிலுக்கு நாயகி வருகிறாள். மொத்தம் இரு பெண்கள், ஒரு ஆண் என மூவர் வேலை செய்யும் நிறுவனம். கோ வொர்க்கிங் ஸ்பேஸில் பொருட்களை புகைப்படம் எடுத்து அதை சந்தைப்படுத்தும் தொழிலில் உள்ள மூவரை, சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அதில் புகைப்படக்கலைஞன் அழகாக கூடவே அமைதியாக இருக்கிறான். அவனுக்கும் சேர்த்து புறவயமான இயல்பு கொண்ட   நாயகியே பேசுகிறாள். தொழில்ரீதியாக நாயகியின் தோழி புகைப்படக்கலைஞன், சுயாதீனக் கலைஞன் என்பதால் அவனை தனது தொழிலுக்கு பயன்படுத்துகிறாள். இப்படித்தான் நாயகி

ஹிப்னாடிசத்தால் தற்கொலையைத் தூண்டும் தொழிலதிபரை தடுக்கும் போலீஸ் அதிகாரியும், ஹிப்னாடிச வல்லுநரும்! - டிசையர் கேட்சர்

படம்
  டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர் டிசையர் கேட்சர் - சீன டிவி தொடர் டிசையர் கேட்சர் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி தலைப்பு நன்றாக இருக்கிறதென டிவி தொடரை தேர்ந்தெடுத்தால் அது உங்களை பாடாய்படுத்துமே அந்த ரகம்தான், டிசையர் கேட்சர் டிவி தொடர். சீனாவில் நிறையப் பேர் திடீரென ஜோம்பி போல நடந்துகொள்கிறார்கள். அதாவது முதல் காட்சியில் ஒருவர் ஏதோ போதையில் இருப்பது போல சாலையில் நடந்து வருகிறார். பறவை சிறகடிக்கும் ஒலி, இசை, மக்களின் பேச்சு இதெல்லாவற்றையும் போதையில் இருப்பவரின் பார்வையில் காட்டுகிறார்கள். திடீரென மணிக்கூண்டு திறந்து குயில் வெளியே வந்து கூவ, போதை மனிதர் வெறிபிடித்தது போல மக்கள் கூட்டத்தில் ஒருவரைப் பிடித்து கழுத்தை கடிக்கிறார். பலரையும் அடித்து உதைக்க முயல்கிறார். எனவே, காவலர் துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொல்கிறார். இதைப்பற்றி மனோவசிய ஆய்வாளர்கள் மாநாட்டில் பேசுகிறார்கள். அதில்தான் லூ ஃபெங்பிங் என்ற மனோவசிய ஆய்வாளர் அறிமுகமாகிறார். ஆம். அவர்தான் நாயகன். இன்னொருவர், மாநாட்டில் ஆர்வம் இல்லாமல் தூங்கி வழியும் காவல்துறை அதிகாரி லுவோ ஃபெய். ஹிப்னாடிச கொலைகள் நட