உடல் எடையைக் கூட்டும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்! - உடல் எடையைக் குறைக்க என்ன செய்யலாம்?

 









உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்

தினசரி வாழ்வில் ஊறுகாய் முதல் உப்புக்கண்டம் வரை ஏராளமான பதப்படுத்தப்பட்ட பொருட்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். பதப்படுத்தப்பட்ட பொருட்களின் மூலம் உடலில் சேர்பவை என்னென்ன? சர்க்கரை, கொழுப்பு, உப்பு (சோடியம்).

உண்மையில் பதப்படுத்தப்பட்ட பொருட்களை முழுக்க தவிர்க்க முடியாது. ஏனெனில், காய்கறி, பழங்களை விட பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாற்பது சதவீதம் விலை குறைவானவை. பொருளாதார நோக்கில் பார்த்தால் மக்களுக்கு இப்பொருட்களை வாங்குவது பர்சைக் கடிக்காத விஷயம். ஆனால், ஆரோக்கிய நோக்கில் பார்த்தால் உடல் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி வரும். உடல் பருமன் அதிகரித்து நீரிழிவு நோய் வந்தால் அதை எதிர்கொள்வது இன்னும் கடினமானது.

வெளிநாடுகளில், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 70 ஆயிரம் மக்கள் பங்கேற்றனர். பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் பத்து சதவீதம் உண்டபோது, அவருக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு 25 சதவீதம் அதிகரித்தது. அதாவது, ஆரோக்கியமான உணவுகளை உண்பவர்களை விட ஏழு மடங்கு அதிக எடை ஆபத்து உருவானது.

வீட்டுச் சமையலில் பயன்படுத்தாத பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் தினசரி சாப்பிடும்போது, அவருக்கு உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு 15 சதவீதமாக அதிகரிக்கிறது.

 பதப்படுத்தப்பட்ட பொருட்களை ஒருவர் சாப்பிடும்போது அவர் உடலில் பசியை உருவாக்கும் ஹெர்லின், பசியை மட்டுப்படுத்தும் ஹார்மோனான பிஒய்ஒய் ஆகிய இரண்டுமே சுரக்கும் அளவு பெரிதும் வேறுபடுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை, எளிதாக மெல்ல முடியும். அதை கீரை, தானிய உணவுகளைப் போல அதிகம் மெல்ல வேண்டியதில்லை.

சடங்கு போல உணவை மென்று விழுங்கி இரைப்பைக்கு அனுப்பிவிட முடியும். வேகமாக சாப்பிடும்போது, உணவு வயிற்றை முழுமையாக நிரப்பி மூளைக்கு அந்த தகவல் செல்லும் முன்னரே அதிகளவு உணவை  பலரும் உண்டுவிடுகிறார்கள். இதனால் உடல் எடை கூடுவது பலருக்கும் எளிதாக நடக்கிறது. மெதுவாக உணவை சுவைத்து சாப்பிடும்போது, உணவு வயிற்றுக்குள் மெல்ல சேகரமாகிறது. இதுபற்றிய தகவல் எளிதாக மூளையை அடைகிறது. இதனால், முழுமையாக வயிறு நிறையும் முன்னரே திருப்தி உணர்வை நாம் அடைகிறோம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கீரைகள், காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதோடு தானியங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை சாப்பிடும்போது கலோரி கணக்குகள் தேவையில்லை. உடற்பயிற்சியைத் தொடரும்போது உடல் எடை மெல்ல குறையத் தொடங்கும்.

 

மண்டி ஆக்லேண்டர்

டைம் வார இதழ்

image -innamykytas pixabay

கருத்துகள்