சூடும் குளிரும் தாண்டிய பௌதிகம்! - கவிஞர் தாமரை

 








எரிமலைக் குழம்பையும்

துருவப் பனியையும்

பிசைந்து போட்டுவிட்டு

கேள்வியென்ன?

சூடும் குளிரும் தாண்டிய

பௌதிகம்

 

நான் வெள்ளிவாசி

நீ செவ்வாயிலிருந்து இறங்கியிருக்கிறாய்

இடைதூரத்தை கடக்க முயல்கிறோம்

நான் கண்ணீராலும் கனத்த 

வார்த்தைகளாலும்

நீ அதிகாரத்தாலும் அடர்ந்த மீசையாலும்

 

சாலையின் ஒரு திசையிலும்

எதிர் திசையிலும்

ஒரே நேரத்தில்

நடந்துகொண்டிருக்கிறோம்

கைகள்

கோர்த்தும் விலகியும்…

-தாமரை

படம் - பிக்ஸாபே

காப்புரிமை - குமுதம்

 


கருத்துகள்