ஒரே மாதிரியாக கட்டுரை எழுதுவதே போர் அடிக்கும் வேலை!
நரசிங்கபுரம்
5/2/2023
அன்பு அன்பரசு
சாருக்கு, வணக்கம். புத்தகம் படிப்பதால் நலமாக இருப்பீர்கள் என்றுணர்கிறேன். காலம்
கடந்துகொண்டிருக்கிறது. சில கடமைகளை காலாகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குள்
தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒன்று அரசு வேலை, மற்றொன்று திருமணம். தற்போது இருக்கும்
வேலையில் சிக்கலும் இல்லை. வளர்ச்சியும் இல்லை என்று உணர்கிறேன்.
எத்தனை
நாட்களுக்கு கணக்கு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியும்? பல வேலைகளைச் செய்வது திடமாக உள்ளது. சென்ற வாரம்
பத்திரிகையில் கணபதி சாருக்கு கணக்கு டவுட்
வந்தது. தீர்வு சொன்னதும் வியப்படைந்தார். அன்றிலிருந்து ‘’வேறெதாச்சும் வேலைக்கு போயா,
இங்கே வளர்ச்சி இருக்காதுன்னு’’ பேசிக்கிட்டே இருக்காரு. எப்போதும்!
அவர்தான்
அண்ணனையும் திட்டி விரட்டியிருப்பார் என்றுணர்ந்தேன். வேலைக்கு இதுபோல் என்றால் திருமணம்
மற்றொரு கதை.
வீட்டில்
எனக்கு திருமணம் செய்ய கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அதிகம் பேசுகிறேனாம். பேச்சில்
தத்துவங்களை அடுக்கி பேசுகிறேனாம். குடும்ப பொருளாதாரச் சிக்கலில் திருமணம் செய்ய,
தற்போது விருப்பம் இல்லை எனக்கு…
சென்ற வாரம்
அருள் என்ற ஓவியர் குழந்தைகள் பத்திரிகையிலிருந்து வந்து வேலைக்குச்
சேர்ந்துள்ளார். ஏதோ அரசியல் சிக்கல் போல. ஓவியர் பிஎம்மை,, வடிவமைப்பு குழுத் தலைவரால்
கன்ட்ரோல் செய்ய முடியவில்லை. அடிக்கடி கடிப்பதால் வலி அதிகமாக இருக்கும்போல..
நேற்று
தீராநதி புத்தகம் – மாத இதழ் வாங்கினேன். சென்ட்ரலில்தான்.
அதேபோல
‘ஹே சினாமிகா’ படம் பார்த்தேன்; துல்கர் சல்மானின்
நடிப்பில். நல்ல கதை. தமிழில் சிறப்பாக இருந்தது. என்னுடைய வாழ்க்கையில் 75 சதவீதம்
பொருந்தியிருந்தது. சமையல், எதேச்சையாக கிடைத்த ஆர்வமுள்ள வேலை, நேர்மையான காதல், சந்தோஷமான
எண்ணம் போன்றவை எண்ணத்தை எட்டியது. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்த கடிதம் விரைவில்
வரும்;. பல கதைகளுடன். நன்றி
காந்திராமன்
image
கருத்துகள்
கருத்துரையிடுக