பால்புதுமையினரை சமூகம் தானாகவே மனமுவந்து ஏற்றுக்கொள்ளாது! - கவிஞர் ஆதித்யா திவாரி
ஆதித்யா திவாரி |
ஆதித்யா திவாரி
கவிஞர், பால்
புதுமையினர் ஆதரவாளர், செயல்பாட்டாளர்
ஜபல்பூரில்
பிறந்து வளர்ந்தவரான ஆதித்யா, கடந்த ஆண்டு பிபிசி வாய்ஸிற்கு, ஆறு பகுதிகளாக பாட்காஸ்ட்
ஒன்றை தயாரித்து தொகுத்து வழங்கினார். கூடவே, ஓவர் தி ரெயின்போ - குயிர் ஐகான்ஸ் ஆஃப் இந்தியா என்ற நூலை ஜக்கர்நட்
பதிப்பகத்தில் வெளியிட்டிருக்கிறார். அவரை ஆடியோ சாட் ரூம் ஆப்பான கிளப்ஹவுஸ் வழியே
சந்தித்து பேசிய பேட்டி இது.
சமூகம் ஏற்றுக்கொண்டபிறகு பால்புதுமையினருக்கான
திருமணம் பற்றிய சட்டம் உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. நவ்தேஜ்
தொடர்பான தீர்ப்பில் பால்புதுமையினர் விவகாரத்தில் எந்த தீண்டாமையும் இல்லை என்ற கூறப்படுகிறது.
இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
சக இந்திய
குடிமக்கள் போல வாழும் உரிமையைப் பெற பால்புதுமையினர் 2023ஆம் ஆண்டில் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
. பால் புதுமையினராக உள்ளதால் உடல் பாகங்களில் உள்ள மாற்றத்திற்காக எங்களுக்கு உரிமைகள்
தர மறுக்கப்படுகிறதா? இதற்கு, ‘நீங்கள் சிறுபான்மையினர் ‘என பதில் கூறுகிறார்கள். இதற்காகவே
பால்புதுமையினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 377 என்ற சட்டத்தை தடை செய்ய
வைத்தனர். அப்போதுதான் அவர்கள் தனிப்பட்ட இடங்களைக் கடந்து வெளியே வர முடியும். அன்பு
நிறைந்த சமூகத்தை உருவாக்க உடல்ரீதியாக தாக்குதல் நடத்தும், இணையத்தில் சீண்டல்களைச்
செய்யும் பலரையும் கடந்து வரவேண்டியதிருக்கிறது.
சமூகம் பால்
பதுமையினரை தானாக மாறி ஏற்றுக்கொள்ளும் என்பது தவறான வாதம், கருத்து என நினைக்கிறேன்.
நவ்தேஜ் வழக்கு தீர்ப்புக்கு பிறகு லெஸ்பியன் தம்பதியினர், தங்களது குடும்பத்தினரின்
தாக்குதலிலிருந்து தங்களைக் காக்க வேண்டுமென கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்னர்தான் நடைபெற்றது. இதுவே இங்குள்ள
சூழலை உங்களுக்குப் புரிய வைக்கும்.
நீங்கள் கூறிய சம்பவங்கள் போல நிறைய
சம்பவங்கள் பால் புதுமையினருக்கு நடைபெற்றுள்ளது. அண்மையில் கியூபாவில் கூட குடும்பம் என்பதற்கான வரையறையை சற்று மாற்றியிருக்கிறார்கள்.
இந்தியாவில் கூட அதுபோல மாற்றங்கள் வரவேண்டுமென நினைக்கிறீர்களா?
இந்திய துணைக்கண்டத்தில்
தற்போதுள்ள குடும்ப அமைப்பிற்கு மாறுபட்ட குடும்ப அமைப்புகள் இல்லாமல் இல்லை. பால்
புதுமையினர் குரு சிஷ்யர்களாக வாழும் ‘ஹிஜ்ரா கரானாஸ்’ என்பவை ஏற்கெனவே இங்குள்ளன.
இங்கு ஒரு குரு இருப்பார். அவருக்கு நிறைய மாணவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இடையிலான
உணர்வு ஆழமானது. மாணவர்களை குரு செலா என அழைப்பார். தனது குழந்தை போலவே குரு அவர்களை
பார்த்துக்கொள்வார்.
பொதுவான குடும்பங்களில்
பால்புதுமையினர் எதிர்ப்பை, வன்முறையை சந்திக்கும்போது அவர்கள் ஹிஜ்ரா கரானாவிற்கு
வருகிறார்கள். ஒருவர் இந்திய சமூகத்தில் குடும்பத்திற்கென இருக்கும் சட்டப்பூர்வ அதிகாரத்தை
மறுக்க முடியாது. பால் புதுமையினருக்கான திருமண விவகாரத்தில் கூட குடும்பங்களின் வன்முறையை
எதிர்கொள்ள வேண்டியுள்ளது என வழக்குரைஞர் விரிந்தா குரோவர் கூறுகிறார்.
பால் புதுமையினர் மீதான ஒவ்வாமை பொது
மக்களுக்கு உள்ளது. ஆனால், அதை அவர்கள் பொதுவெளியில் ஏற்பதில்லை. அவர்கள் மீது தொடுக்கப்படும்
வன்முறைக்கும் ஆதாரமில்லை. நீதிமன்றங்களில் பால்புதுமையினர் மீதான தாக்குதல் வழக்கும்
பதிவாவதில்லை. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நவ்தேஜ் தீர்ப்பு
வந்தபிறகு பால்புதுமையினர், தங்கள் மீது சமூகம் தொடுக்கும் வன்முறையைத் தடுக்க சிறு
நகரம், கிராமங்களில் மறைந்து வாழ வேண்டியதிருக்கிறது. பால்புதுமையினர் மீதான வன்முறைகளை
தனியாக தகவல் தளம் வைத்து அரசு பதிவு செய்யவேண்டும். ஏனெனில் அவர்கள் மீது கொடூரமான
தாக்குதல் நடத்தப்படுகிறது. கோவையில் அறுபது வயதான பால்புதுமையினரான சங்கீதா, உடலுறவுக்கு
ஒத்துழைக்கவில்லை என இருபத்து மூன்று வயதானவர் அவரைக் கொலைசெய்துவிட்டார். ஊடகங்களில்,
அரசின் பதிவேடுகளில் சங்கீதா பால்புதுமையினர் என பதிவாகவே இல்லை. உண்மையில்அவர் பால்புதுமையினர்
என்பதால், கொலை செய்யப்பட்டார். அண்மையில் கேரளத்தில் பால்புதுமையினரான பவீன் நாத்
என்பவர், இணைய ரீதியான சித்திரவதைகளால் இறந்துபோனார்.
அரசு, பால்புதுமையினரின் திருமணம் பற்றிய
கருத்துகளில் வேறுபட்ட பார்வையைக் கொண்டுள்ளது. ஜி 7 மாநாட்டின்படி பால்புதுமையினரின்
உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளது. பால்புதுமையினருக்கான
கோரிக்கைகள் என்ன?
சட்டம் இயற்றுபவர்கள்
பால் புதுமையினரின் எதிர்காலத்தை வடிவமைக்க சரியான நேரம் இதுவே. உலகின் பெரிய ஜனநாயக
நாடான இந்தியா, தனது அத்தனை குடிமக்களையும் ஒன்றுபோல நடத்த வேண்டும். உலகின் விஷ்வகுரு
என்று உண்மையாகவே காட்ட நினைத்தால், சமூகத்தில் பால்புதுமையினர் ஒரு அங்கம் என ஏற்கவேண்டும்.
பல்வேறு பட்டியல்களில் பால் புதுமையினரை ஏற்க மறுப்பது, உலகளவில் உள்ள பால்புதுமையினரோடு
இணைவதற்கு தடையாக உள்ளது.
சிட்டாஜித்
மித்ரா
இந்து ஆங்கிலம்
படம் - பின்டிரெஸ்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக