இடுகைகள்

ஷியாம் பெனகல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்

படம்
  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் -  IE ஷியாம் பெனகல் திரைப்பட இயக்குநர் முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.  இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்? படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.  ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன? நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்கள

ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிகர் தெரிவது தவறு கிடையாது! - நஸ்ரூதின் ஷா, இந்தி திரைப்பட நடிகர்

படம்
  நஸ்ரூதின் ஷா இந்தி திரைப்பட நடிகர் தான் சிறுவயதாக இருக்கும்போதிலிருந்து அதிகாரத்தை எதிர்ப்பதாக நஸ்ரூதின் ஷா கூறினார். அவரின் வாழ்க்கை, கலை, வாழ்க்கை பற்றி நம்மிடையே பேசுகிறார்.  நீங்கள் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது நீங்கள் நடித்த படம்  அல்லது நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது எப்படி உணர்கிறீர்கள்? நான் உங்களை திருத்த நினைக்கிறேன். நான் திரையுலகிற்கு வந்து 48 நாட்கள் ஆகின்றன. 2025ஆம் ஆண்டு வந்தால்தான் 50 ஆண்டுகள் ஆகிறது. நான் எனது முதல் படத்தை வங்காள மொழியில் ஷியாம் பெனகலின் நிஷாந்த்துடன் செய்தேன். 1975ஆம் ஆண்டு நடித்த படம் அது. நான் திரைப்படம், டிவி இன்ஸ்டிடியூட்டில் படித்தபோது கிடைத்த வாய்ப்பு அது. என்னை பரிந்துரைத்தவர், அந்த மையத்தின் இயக்குநராக இருந்த திரு. கிரிஷ் கர்னாட் தான்.  ஷியாம் பெனகலின் படத்தில் நடிக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் எல்லோருமே அழகாக இருந்தார்கள். அதனால் அந்த விஷயத்தில் பலவீனமாக இருந்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது.  இந்தி திரைப்படங்களில் நான் நாயகனாக நடிப்பேன் என்று நினைக்கவில்லை. ஏனெனில் சிறிய பாத்திரங்களில் அப்போது மு